பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

664

voltaic lcell : (மின்) ஓல்ட்டா மின்கலம் : ஒரு வகை அடிப்படை மின்கலம். இதனை முதலில் கண்டு பிடித்தவர் ஓல்ட்டா. அதனால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது இரு முரண்பட்டி உலோகங்கள் ஒரு கரைசலில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும், அந்தக் கரைசல், ஓர் உலோகத்தை இன்னொரு உலோகத்தின் மீது அதிக அளவில் வேதியியல் வினைபுரியும். இதனால் இரு உலோகங்களுக்குமிடையே மின்னழுத்த நிலை வேறுபாடு உண்டாகிறது

voltmeter ; (மின்) மின்னழுத்த மானி : மின்வலி அலகீட்டுக் கருவி

volume :(மின்.) ஒலியளவு ; ஒலியின் செறிவளவு

volumenometer : போக்களவுமானி : நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருட்களின் பொருண்மையை அளக்கும் கருவி

volumenometry : போக்களவு மானம் : நீக்கும் நீர்ம அளவால் திடப் பொருளின் பரும அளவு காணும் முறை

volumeter : (மின்.) வளிப்பிழம் பளவுமானி : காற்றின் பொருண்மையை அளக்கும் கருவி

V-thread : (எந்;பட்.) V-திரு கிழை ; 'V' என்ற ஆங்கில எழுத் தின் வடிவில் அமைந்துள்ள திரு கிழை 60° கோணத்தில் அமைந்த்திரு கிழையையும் இது உள்ளடக்கும்

V-type engine: (தானி) V-வடிவ எஞ்சின் : V என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தில் அடுக்கப் பட்ட நீள் உருளைத் தொகுதிகளைக் கொண்ட ஓர் எஞ்சின்

'vulcanite , (வேதி.) கந்தக ரப்பர்: கந்தகம் கலந்து கடுமையூட்டப் பட்ட ரப்பர். இந்திய ரப்பரும் கந்தகமும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். இது நெகிழ் திறம் இல்லாத கடினமான ரப்பர்

vulcanizing : (வேதி.) கந்தக வலி ஆட்டம் : இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல் ரப்பருக்கும் வலிமையும் நெகிழ்திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய்யப்படுகிறது