பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'

665


wainscot : (க.க.) சுவர்ப் பலகை : உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளைப் பதித்து அழகுபடுத்துதல்

wainscoting : (க.க.) சுவர்ப் பலகையிடு : உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளை அமை

wainscoting cap : (க.க) சுவர்ப் பலகைத் தொப்பி : சுவர்ப் பலகைகளின் உச்சியில் வார்ப்புகளை அமைத்தல்

walke-talkie : (மின்.) சிறு சேணி : செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கையடக்க வானொலிப் பெட்டி. இது நடுத்தரத் தொலைவுகளில் களச்செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது

wall box : (மின்.) சுவர்ப்பெட்டி : வீடுகளில் மின்கம்பி இணைப்புகள் அமைப்பதில் மின்விசைக்கு அல்லது கொள்கலனுக்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பெட்டி

wallbed : (க.க.) சுவர்ப் படுக்கை : சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப்படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும். பல வகைகளிலான இவ்விதப் படுக்கைகள் சிறிய இல்லங்களில் பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன

wall board : (க.க.) சுவர் போர்டு : கட்டடத்துக்குள்ளாக உள்புறச் சுவர்களிலும் கிடைமட்டக் கூரைகளிலும் பிளாஸ்டர் பூச்சுக்குப் பதில் ஒட்டி நிற்கும் வகையில் பயன்படுத்தப்படுவது

wall bracket : (எந்.) சுவர் பிராக்கெட் : செங்கோண வடிவிலான தண்டு இரு புயங்களில் ஒன்றைச் சுவர்மீது அல்லது கம்பம் மீது பொருத்தலாம். எதையேனும் தாங்கி நிற்க மற்றொரு புயம் உதவும்

wall plate : (க.க.) சுவர் பிளேட் : வேலை பளு பரவலாக அமையும் பொருட்டு உத்தரம், இரும்பு கர்டர் ஆகியவற்றை இரு ஓரங்களிலும் தாங்கி நிற்க சுவரில் பிதுக்கமாக அமைந்துள்ள மரத்தண்டு

wall section : (வரை.) குறுக்கு வெட்டுச் சுவர் : சுவரின் உயரங்களையும், சுவரைக் கட்டும் முறைகளையும் காட்டும் சுவரின் குறுக்கு வெட்டுச் சுவரின் வரைபடம்

wall socket : (மின்.) சுவர் துளையம் : மின்சாரம் பெறுவதற்கென சுவருக்குள் அல்லது சுவர் மேல் அமைந்த மின்னோட்ட முனை

walnut, black : (தாவ.) கரும் வாதுமை மரம் : அமெரிக்காவைத் தாய்கமாகக் கொண்ட அழகிய கடின மரங்களில் ஒன்று. இது சாக்கலேட் பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இது நேர் கரணைகளையுடையது; நீண்ட காலம் உழைக்க வல்லது. இதில் எளிதாக வேலைப்பாடுகள் செய்யலாம். பீரங்கிக்குழல் மரச்சட்டம், மேலடை மெல்லொட்டுப் பலகை