பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

666

நிலைப்பெட்டி ஆகியவை தயாரிக்க இது பயன்படுகிறது

wane : (மர.வே.) கோட்டம் : உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறுநுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவது ஒரு புறம் சற்று கோணலாக இருத்தல்

warding file : (எந்.) பட்டை அரம் : மெல்லிய தட்டையான அரம். குறிப்பாக பூட்டுத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவது

warm-blooded : (உயி.) வெப்பக் குருதிப் பிராணிகள் : உயிரினங்களில் பாரன்ஹீட் 98 முதல் 1129 வரை வெப்பநிலையுடைய பிராணிகள். இவை சூழ்நிலையை விட மிகுதியான சூழ்வெப்ப நிலை கொண்டவை

warp : (வானூ.) பாவு நூல் : விமான இறக்கையின் வடிவம் மாறும் வகையில் அதை வளைத்தல் (துணி) தறியில் நீளவாட்டில் அமைந்த பாவு நூல். (மர.வே.) ஈரப்பசை அல்லது வெப்பம் காரணமாக மரம் நெளிந்து போதல்

warping : (வார்.) நெளிசல் : ஒரு வார்ப்படம் ஆறும்போது ஏற்படுகிற சீரற்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக வார்ப்படத்தில் ஏற்படுகிற கோணல் அல்லது நெளிசல்

wash : (வானூ. ) குலைவு : வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு

washer : (எந்.) வாஷர் : ஓர் இணைப்பு அல்லது ஸ்குரூ போன்றவை சிறிதும் இடைவெளியின்றி நன்கு பொருந்தி உட்காருவதற்காகப் பயன்படுத்தப்படுகிற நடுவே துளையுள்ள ஒரு தட்டையான சிறிய வட்டு

washer : (எந்.) பட்டை வளையம் : சுரியாணி மரைக்குக் கீழே இடும்பட்டை வளையம்

வாஷர்

washer cutter : வாஷர் வெட்டர் : தோல், ரப்பர் போன்றவற்றைக் கொண்டு வாஷர் தயாரிக்கின்ற கருவி நிலையான நடுவெட்டுப் பகுதியையும், மாற்றியமைக்கத்தக்க இரு வெட்டுமுனைகளையும் கொண்டது

வாஷர் வெட்டர்

washin : (வானூ.) வாஷின் : விமானத்தின் இறக்கை நுனியில் தாக்கு கோணம் அதிகரிக்கின்ற அளவுக்கு இறக்கையை வளைத்துவிடல்

wash out : (வானூ.) வாஷவுட் : விமான இறக்கையின் நுனியில் தாக்கு கோணம் குறைகின்ற வகையில் இறக்கையை வளைத்துவிடல்

wassermann reaction : (நோயி.) மேகக்கிரந்தி நோய்ச் சோதனை : ஒருவர் கிரந்தி என்னும் மேகப்புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவி செய்யக்கூடிய "இணைப்பான்' என்னும் பொருள் அடங்கியுள்ளது. ஒரு நச்சுப் பொருள், அதாவது, 'ஆ' என்ற வேறொரு பிராணியின் இரத்தம், 'அ' என்ற பிராணியின் இரத்தத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரத்தம்), தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுடன் கலக்க வேண்டும். இணைப்பானுடன் நச்சுப் பொருள் கலந்திருந்தால், நச்சு 'அ' வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ' வின் குருதியை மேகக்கிர்ந்தி பீடித்திருக்குமானால், 'ஆ' நச்சு கலப்