பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'

667


பதற்கு முன்பு 'அ' இரத்தம் இணைப்பானுடன் இணைந்து விடும். அப்போது, 'ஆ' நச்சு கலப்பதற்கு இணைப்பான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால் 'ஆ' நச்சு 'அ' குருதியைத் தாக்க இயலாது. 'அ' குருதியின் உயிரணுக்கள் சேதமடையாமல் இருக்கும். இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்

waste : (உலோ.) கழிவுப்பஞ்சு : பஞ்சாலைகளில் கழிக்கப்படும். மெல்லிய பருத்தி இழைகள். இது எந்திரங்களைத் துப்புரவு செய்யப் பயன்படுகிறது

wastes : (பட்.) கழிவுப் பருத்தி : பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக்கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மொத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்

waste lubrication : (எந்.) கழிவு மசகு : அச்சுமுனை அமைந்த பெட்டிக்குள்ளாக எண்ணெய் தோய்ந்த கழிவுப் பொருளை அடைத்து வைத்தல். ரயில் பெட்டிகளில் இவ்விதம் மசகிடும் முறை கையாளப்படுகிறது

water bar :' (க.க.) நீர்த் தடுப்புத் தண்டு : நீர், குறிப்பாக மழை நீர் உள்ளே நுழையாமல் இருப்பதற்காக ஜன்னலின் அடிப்புறத்தில் மரக்கட்டைக்கும், கல்லுக்கும் இடையிலும் செருகப்படுகிற தண்டு அல்லது பட்டை

water cooling : (பொறி.) நீர் வழி குளிர்விப்பு : உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை

water gas : (வேதி.) நீர் வாயு : ஒரு வித வாயு. மிகச் சூடான நிலக்கரி அல்லது கோக் மீதாக நீராவியைச் செலுத்தும்போது உண்டாவது. இந்த வாயு திரவ ஹைட்ரோ கார்பன்களைக் கொண்டது. சில சமயங்களில் எரிபொருளாக அல்லது வெளிச்சம் தருவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது

water glass : (வேதி.) நீர்க் கண்ணாடி : குவார்ட்ஸ் மணலை, பொட்டாஷ் அல்லது சோடியம் ஹைட்ரேட்டுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிற சோடியம் அல்லது பொட்டாசியம் சிலிக்கேட் கரைசல். இது எண்ணெய் கலந்தது போலக் குழம்பாக இருக்கும். ஒட்டுவதற்கும், காப்புப் பூச்சாகவும், தீக்காப்புப் பொருளாகவும் பயன்படுவது

water hammer : நீர் அறைவு: ஒரு குழாயின் வழியே செல்லும் நீரைத் திடீரென்று தடுத்து நிறுத்தினால் சம்மட்டி அறைவது போன்று எழும் ஒலி

water jacket : (பொறி.) நீர்ப் போர்வை : மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்தைத் தொடர்ந்து அகற்றுவது இந்த ஏற்பாட்டின் நோக்கம்

water main : (கம்.) பெருங்குழாய் : சீர் வழங்கும் திட்டத்தின் அடித்தளப் பெருங்குழால்

water mark : நீரோட்டம் : காகிதம் தயாரிக்கப்படுகையில் புடைப்பான டிசைன் கொண்ட ஒரு சிலிண்டர் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக காகிதத்தில் ஏற்படும் குறியீடு. பின்னர் காகிதத்தில்