பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
65

வாயிலாக ஒவ்வொரு நீள் உருளைக்கும் நேரம் சீராக அமைக்கப்படுகிறது

automatic stability : (வானூ) தானியங்கி உறுதிநிலை : தானாக இயக்கப்படும் இயக்கக் கட்டுப்பாடு மேற்பரப்புகளைப் பொறுத்ததாக இருக்கும் உறுதிநிலை

automatic switch : (மின்) தானியங்கி இணைப்பு விசை : தேவையான நேரங்களில் தானாகவே திறந்து மூடுகிற ஓர் இணைப்பு விசை

automatic telephone : (மின்) தானியங்கித் தொலைபேசி : ஓர் இயக்குபவரின் துணையின்றித் தானாகவே இயங்கும் இணைப்பு விசைகள் மூலம் ஒரு தொடர்பினை முழுமையாக்க அனுமதிக்கின்ற ஒரு வகைத் தொலைபேசி

automatic welding: (பற்) தானியங்கிப் பற்றவைப்பு : பற்றவைக்க வேண்டிய உறுப்புகளையும், ஒளிச் சுடரையும் தானாக இயங்கச் செய்யும் பற்றவைப்புச் சாதனம்

automation : தானியக்கம்: செய் பொருளாக்கத்தின் எல்லாப் படிகளையும் தானே இயங்கும் எந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை. இது மனித முயற்சியை மிச்சப்படுத்தும் அமைவு ஆகும்

automation: தானியங்கும் பொறி: வாழும் உயிரினங்களின் செயல்களைத் தானாகவே, போலச் செய்யும் ஒரு சாதனம் அல்லது எந்திர முறை

auto mechanics : உந்தூர்தி எந்திரவியல்: உந்துார்திகளைப் பழுது பார்க்கவும் பராமரிக்கவும் பயனாகும் நடைமுறை அறிவியல்

automobile : உந்தூர்தி : நீராவி பெட்ரோல் அல்ல்து மின்விசை மூலமாகச் செலுத்தப்படும் ஓர் ஊர்தி .களிப்பு உந்துகள், வாணிக உந்துகள், வழங்கு உந்துகள், சரக்கு உந்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்

automobile battery:(தானி; மின்.) ஊர்திச் சேமக்கலம் :உந்து ஊர்தியின் இயக்கத்தையும், விளக்கு அமைவுகளையும் இயக்கக் கூடிய சேம மின்கலத் தொகுதி. மின்னியல் முறையில் இயங்கும் ஊர்திகளுக்கான மின்னோட்டத்தை வழங்கும் சேம மின்கலத் தொகுதி

automotive engineer : உந்தூர்திப் பொறியாளர் : உந்தூர்திகளை வடிவமைப் பதிலும், உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்ற பொறியாளர். பொதுவாக எந்திர விசையால் இயங்கும் அனைத்து உந்தூர்திகளின் பொறியாளரையும் இது குறிக்கும்

autonomic : தன்னியக்க உறுப்புகள் : மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், இதய மண்டலம் போன்ற தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொண்டும் இயங்கும் உடலுறுப்புகள்

autoplate : (அச்சு) தானியல் அச்சுபாளத் தகடு : உருவ அச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் வளைவான தகடுகளை வார்ப்படம் செய்து இழைத்து செவ்வொழுங்கு செய்து பயன்படுத்து வதற்கு ஆயத்தமாகத் தரக்கூடிய ஒரு பொறி அமைவு

auto pulse magnetic fuel pump: (தானி எந்.)தானியியங்கி அதிர்வுக் காந்த எரிபொருள் இறைப்பி : உந்தூர்தியிலுள்ள எரி-வளி கலப் பியில் எரிபொருள் அளவினைப் பராமரிப்பதற்காக மின்விசையினால் இயக்கப்படும் ஒரு சாதனம்