பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

668


வெளிச்சம் ஊடுருவும் வகையில் வைத்துப் பார்த்தால் அந்த டிசைன் தெரியும். அது நீரோட்டம் எனப்படும்

water proofing walls : (க.க.) நீர் புகாப் பூச்சு : சுவருக்குள் நீர் அல்லது ஈரம் பாயாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டுடன் ஒரு கலவையைக் கலத்தல். அல்லது அந்தக் கலவையைச் சுவர் மீதே பூசுதல்

water pump : (தானி.) நீர் பம்ப் : மோட்டார் என்ஜினைக் குளிர்விப்பதற்கான முறையில் நீரோட்டம் நடைபெறுவதற்குப் பயன்படும் பம்ப். இந்த பம்புகள் பொதுவில் சிலிண்டர் பிளக் முன்பாக அமைந்திருக்கும். விசிறி இயக்கத்துடன் அல்லது ஜெனரேட்டர் மூலம் பம்ப் இயக்கப்படுகிறது

water putty : (மர.வே.) அடைப்புப் பொடி : இப்பொடியை நீருடன் கலந்து மரப்பொருட்களில் உள்ள மெல்லிய வெடிப்புகள், ஆணித் துவாரங்கள், முதலியவற்றை அளப்பதற்குப் பயன்படுத்தலாம். எனினும், பளபளப்பூட்டுவதற்கு உகந்ததல்ல

water recovery apparatus : (வானூ.) நீர் சேகரிப்புச் சாதனம் : வான் கப்பலில் உள் எரி என்ஜின்களிலிருந்து வெளிப்படுகிற வாயுக்களைச் சேகரித்து குளிர்வித்து அவற்றில் அடங்கிய நீரைப் பிரித்தெடுக்கிற சாதனம்

water softener : (கம்.) நீர் மென்னாக்கி : வீடுகளில் கிடைக்கும் நீரில் கால்சியம், மக்னீசியம், சல்பேட், பைகார்பனேட் அடங்கியிருந்தால் சோப்பிலிருந்து நுரை வராது. நீரிலிருந்து உட்பொருட்களை அகற்றும் கருவி. இந்த நோக்கில் பயன்படுத்துகிற வேதிப் பொருள்

water spots :(வண்.அர) பூச்சுத் திட்டு : ஒரு பொருளுக்கு வார்னிஷ் பூச்சு அளிக்கும்போது மாறுபட்ட நிறத்துடன் சிறு திட்டுகள் காணப்படும். சில சமயங்களில் சற்று ஆழமாகவும் காணப்படும். ஈரப்பசை உள்ளே அமைந்த காரணத்தால் ஏற்படுவது

water table : (க.க.) நீர் வடிகை : ஒரு கட்டடத்தைச் சுற்றி சற்று நீட்டிக் கொண்டிருக்கிற சரிவான பலகை. மழைநீர் சுவர் மீது விழாமல் இருப்பதற்கான ஏற்பாடு

water vapor : (குளி.பத.) நீராவி : வாயுமண்டலத்திலுள்ள நீராவி

watt, James ( 1736–1819) : வாட், ஜேம்ஸ் (1736-1819) : நீராவி எஞ்சினைச் சீர்திருத்தி முதலாவது செறிமான நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காத்லாந்து விஞ்ஞானி. நீராவி எஞ்சினின் வேகத்தை முறைப்படுத்துவதற்கான சாதனத்தையும் இவர் கண்டுபிடித்தார். 1874 இல் நீராவி இருப்பூர்தி எஞ்சினுக்குப் புனைவுரிமை பெற்றார்

watt : (மின்.) வாட் : மின்சக்தி மின் அலகு. இது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கினால் கிடைக்கும் தொகைக்குச் சமம்

watt hour : (மின்.) வாட் மணி : மின்சக்தியின் பணியை அளக்கும் அலகு. இது ஒரு மணிநேரம் ஒரு வாட்டைச் செலவழித்தால் ஆகும் மின்சக்தியின் அளவு

wattless current : (மின்.) வாட் இல்லா மின்சாரம் : மாறுமின்னோட்டத்தில் விசையை உற்பத்தி செய்ய வோல்டேஜூடன் சேராத பகுதி. செயலற்ற பகுதி. செயல் பகுதிக்கு மாறானது

wattmeter : (மின்.) வாட்மாணி : மின்சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது