பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'

669


வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம் மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது

watt second : (மின்.) வாட் விநாடி : மின்சக்தியை அளக்கும் அலகு. இது ஒரு விநாடி நேரத்துக்கு ஒரு வாட் செலவழித்தால் ஆகும் மின்சக்திக்குச் சமம்

watts per candle :(மின்.) கேண்டில் அளவில் வாட் : ஒரு மின் எவ்வளவு மின்சாரத்தை பல்பு. பயன்படுத்துகிறது என்பதை இடை மட்டமாக சராசரியாக உற்பத்தியாகிற கேண்டில் பவர் அளவில் வாட் கணக்கில் கூறுவது

wave form : (மின். ) அலை வடிவம் : காலத்திற்கு எதிரான ஒரு சுழற்சியின்போது ஓர் அலையின் உடனடி மதிப்பளவுகளை வரைவதன் மூலம் கிடைக்கும் ஓர் அலையின் வடிவம்

wave front : (மின்.) அலைமுனை : மிகவும் முன்னேறிய ஓர் அலையின் மிக முந்திய முனை

wave meter : (மின்.) அலைமானி : ஓர் அலையின் அலை வெண்ணை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவு கருவி

wave train : (மின்.) தொடர் அலை : ஒரு குறுகியகாலத்திற்கு ஏற்படும் அலைச் சுழற்சிகளின் தொடர் வரிசை

wave length : (மின்.) அலை நீளம் : இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம். வானொலியைப் பொருத்தவரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் புள்ளிகள் இடையிலான தொலைவு

wave : (மின்.) அதிர்வலை : ஓர் ஊடகத்தில் ஏற்படும் அதிர்வலை அலைகள் மூலம் ஆற்றலை அனுப்பலாம். எடுத்துக்காட்டு : ஒலி,ஒளி அலைகள.

wave, electromagnetic : (மின். ) மின்காந்த அலை : ஒரு மின்னியல் புலமும், ஒரு காந்தப்புலமும் உடைய ஓர் அலை. எடுத்துக் காட்டு: வானொலி அலை

waviness : (குழை.) அலைவம் : மேற்பரப்பு அலை மாதிரியில் வளைந்து அமைதல்

wax : (வேதி.) மெழுகு : உயர் ஒற்றை அணு ஆல்கஹாலின் கரிம உப்பும், மிகுந்த கொழுப்பு அமிலமும் கலந்தது. உதாரணம்: தேன் மெழுகு

wax engraving : (அச்சு.) மெழுகி உருமானம் : மெழுகு அளிக்கப்பட்ட தாமிரத் தகடுகளின் மீது தக்கபடி வடிவம் கொடுத்து பின்னணியை தயார்படுத்தி அதிலிருந்து எலெக்ட்ரோ பிளேட்வகை பிளேட்டைத் தயாரித்து அச்சிடுதல்

wax finish : (மர.வே) மெழுகு நேர்த்தி : மரத்தால் ஆன பொருட்கள் மீது இதற்கென்று தயாரிக்கப்பட்ட மெழுகைப் பூசித் தேய்ப்பதன் மூலம் மிக நைசான நேர்த்தியைப் பெறமுடியும்

ways : (பட்.) சறுக்குப் பள்ளம் : நெடுக அமைந்த சிறுபள்ளம். வேலை செய்யப்படுகின்ற பொருள் அல்லது அதைத் தாங்கிய பொருள் இப்பள்ளங்களின் மீது அமைந்தபடி சறுக்கிச் செல்லும்

weak sand : (வார்.) சேரா மணல் : வார்ப்பட வேலைக்கான மணலில் சிறு சத அளவுக்குக் களிமண் இருப்பதன் விளைவாக ஒன்று கூடிச் சேராத மணல்