பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

670

wear and tear : தேய்ந்தழிதல் : பயன் காரணமாக மதிப்பில் ஏற்படும் குறைவு

weather : பருவ நிலை : மரம், கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து, உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை

weather boards : (க.க.) மழைப்பலகை : கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள், மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு

weathering : (க.க.) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு : சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்பு கள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற்புறத்தில் ஏற்படும் பாதிப்பு

weather strip : (க.க.) கசிவுத் தடுப்பான் : சன்னல், மற்றும் கதவுகளின் வெளிப்புறத்தின் கீழ்ப்பகுதியில் உலோகம், மரம் அல்லது வேறு பொருளில் செய்யப்பட்ட பட்டையை அமைத்தல். கதவு மீது படும் நீர் கீழிறங்கும் போது உள்ளே வராமல் தடுக்கும் ஏற்பாடு

web : (எந்.) வெப் : வார்ப்படங்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் இரு பகுதிகளை இணைக்கும் மெல்லிய தகடு அல்லது பகுதி. (காகிதத் தயாரிப்பு) காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரிப்பு நிலையில் உள்ள அல்லது தயாரிக்கப்பட்ட காகிதம்

webbing : சாக்குப் பட்டை : சணல் இழையைக் கொண்டு 3,3 1/2 மற்றும் 4 அங்குல அகலத்தில் 72 கெஜ நீளத்துக்குத் தயாரிக்கப்படுகிற சாக்குப்பட்டை மர இருக்கை பிரேம்களில் ஸ்பிரிங்குகளுக்குக் கீழே அமைக்கப்படுவது

webbing stretcher : விறைப்புக் கட்டை : மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொருள் சுற்றப்பட்டிருக்கும். மறுபுறத்தில் செருகுவதற்கு வசதியாக கூரான உருக்கு முனைகள் இருக்கும்

web-calendered : சுருள் நேர்த்தி : காகித உற்பத்தியின்போது காகிதம் நீண்ட சுருளாக இருக்கும் போதே சுழல் உருளைகள் இடையே செலுத்தப்பட்டு மழமழப்பாக் கப்படுதல்

weber's law : (மின்.) வெபர் விதி : "துலங்கலில் கணிசமான ஒரு மாறுதலை உண்டாக்குவதற்குத் தேவைப்படும் குறைந்த அளவுத் தூண்டல் மாற்றமானது, ஏற்கெனவே உள்ள தூண்டலுக்கு வீத அளவில் இருக்கும்" என்பது வெபர் விதியாகும்

weber, wilhelm Eduard (1024-1891) : வெபர், வில்ஹெல்ம் எட்வர்ட் (1804-1891) : மின்னியலில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஒரு ஜெர்மன் இறைமையியலாளர்; விஞ்ஞானி

web of drill : (எந்.) குடைவி முனை : ஒரு குடைவு கருவியில் சுழன்று இறங்கும் வெட்டுக் குழிவுகளின் அடிப்புறத்தில் குடைவியின் பருமன்