பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
673

wheel hub :சக்கரக் குடம் : ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக்கும்

wheel lathe : சக்கரக் கடைசல்: எந்திரம் : குறுகிய மேடையும் ஆழமான இடைவெளியும் கொண்ட விசேஷ கடைசல் எந்திரம். சக்கரங்களைக் கடைவதற்குப் பயன்படுவது

wheel puller :(தானி.) சக்கர இழுவி: மோட்டார் வாகனச் சக்கரங்களை அச்சிலிருந்து விடுவித்து வெளியே இழுப்பதற்கான கருவி

wheel truing : (எந்.) சக்கர வடிவச் சீரமைவு: ஒரு சாணைச் சக்கரத்தைச் சமநிலைக்கு கொண்டு வருவதற்கு அல்லது சாணைத் திறனை மேம்படுத்துவதற்கு அதன் உறுப்பு எதனையும் சீரமைவு செய்யும் முறை

Wheel window: (க.க) சக்கரப் பலகணி : சக்கரத்தில் உள்ளது போன்று ஆரைகள் அமைந்த வட்ட வடிவச் சாளரம்

wheel wright :சக்கரப் பணியாளர் : வாகின்கள் அல்லது அலை போன்றவற்றைத் தயாரிக்கிற அல்லது பழுது பார்க்கிற பணியாளர்

Whetting : (எந்.) தீட்டுதல்: வெட்டு முனையைக் கூறாக்கு வதற்காக சிறு துளி எண்ணெய் சேர்க்கப்பட்ட தீட்டுக் கல்லில் தீட்டுவது

whirler: சுழல்வி : மண்பாண்டங் களுக்கு பட்டையிடும் போது அல்லது அலங்கார வேலைப்பாடு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுழல் கருவி

white antimony : (வெண்.அர.) வெள்ளை ஆன்டிமனி : பெயின்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற நச்சற்ற வெள்ளை நிறப் பொருள் டைட்டானியம் ஆச்சைட் பெயின்ட் போன்று மெல்ல உலரும் தன்மையை அளிப்பது

white cedar : (மர. வே.) வெள்ளை செடார் : . முதல் 15 மீ. உயரம் வளரும் மரம். குறுக் களவு ஒன்று முதல் 6 மீ., இருக்கும். லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுவது

white coat : வெள்ளைப் பூச்சு: சிமென்ட் போன்ற பூச்சு அளிக்கப்பட்ட சுவர் மீது உறுதியான வெள்ளைப் பூச்சு அளித்தல். இப்பூச்சுப் பொருளானது பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிசும், சுண்ணாம்புக் குழைவும் அடங்கியது. இதனுடன் சில சமயம் பொடியாக்கப்பட்ட சலவைக் கல்லும் சேர்க்கப்படும். மேல் பூச்சுக்கு ஜிப்சம் குழைவும் பயன்படுத்தப்படலாம்

white iron : (உலோ.) வெள்ளை இரும்பு : மிகவும் உறுதியான வார்ப்பு இரும்பு, தயாரிப்பின் போது வார்ப்பானது உலோக அச்சில் குளிர்விக்கப்படுகிறது

white lead: (வேதி.வண்.) ஒயிட் லெட் : காரீயத்தின் ஹைட்ரேட் கார்பனேட் பெயின்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது

white light : (மின்) வெண்ணொளி : சிவப்பு, பச்சை, ஊதா வண்ணங்கள் உரிய வீத அளவு களில் கலந்த கலவை

white-metal alloys : (உலோ.) வெள்ளை உலோகக் கலோகங்கள் : துத்தம், ஈயம், தாமிரம் ஆகிய