பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

674

வற்றைச்சேமித்துத் தயாரிக்கப்படுகிற ஆலோகம். மோட்டார் வாகனத்தில் கடினமான உறுப்புகளை அச்சு வார்ப்பு மூலம் தயாரிக்கப் பயன்படுவது

White oak : (தாவ.) வெண் கரு வாலி : மிகுந்த வலிமையும் நீண்ட காலம் உழைக்கும் திறனும் உடைய நெருக்கமான கரண்கள் உள்ள கனமான மரம்.அமெரிக்காவிலுள்ள கருவாலி மரங்களில் மிகவும் கனமானது

white peak : தொலைக்காட்சியில் வெண்மைத் திரையில் வெண்ணிறப் படச்சமிக்ஞைகளின் உச்ச அளவு முனைப்பு

white pine : (மர. வே.) வெள்ளை பைன்: நீளவாட்டில் உள்ளோட்டம் அமைந்த மென் மரம்; வெளிறிய நிறம்; வடிவமைப்புப் பணிகளுக்கும் இணைப்புப் பணிக்கும் விரிவாகப் பயன்படுவது

white space : (அச்சு) வெள்ளிடம்: ஒரு ஷீட்டில் அச்சிடப் படாத பகுதி

white Spots : (வண்; அர.) வெள்ளைத்தட்டு : இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள். அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப்பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத மட்டமான கரைப்பானை பயன்படுத்துவதாலும் ஏற்படுவது

white spruce : (மர.வே.) விலை குறைவான சாதாரண மரம் : பெரிதும் பிரேம்களைச் செய்யவும், தரைகளை அமைக்கவும் மற்றும் அது போன்ற பணிகளுக்கும் பயன்படுவது

white wash : (க.க) வெள்ளையடி: நீரில் கரைத்த சுண்ணாம்பை பிரஷ் கொண்டு பூசுதல் அல்லது ஸ்பிரே கருவி மூலம் ஸ்பிரே செய்தல். சுண்ணாம்பு நன்கு ஒட்டிக் கொள்ள சில சமயங்களில் உப்பு சேர்ப்பது உண்டு. நீலத்தைச் சேர்த்தால் நல்ல வெண்மை கிடைக்கும்

whithing ; (வேதி.) வெள்ளைப் பசை : நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந்தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது

Whitney keys : (எந்.) விட்னி கீ: சதுர தண்டு சாவிகள். இருமுனைகளிலும் நுனிகள் மழுங்கலாக இருக்கும்

whitworth thread : (எந்.) விட்வர்த் திருகு ; தர நிர்ணயப் படுத்தப்பட்ட இங்கிலாந்தின் திருகுபுரி தலைப்பகுதியும் நுனியும் மழுங்கலாக இருக்கும். புரியின் கோணம் 55 டிகிரி

whole depth : (பல்லி) மொத்த ஆழம் : ஒரு சக்கரத்தின் பல் பற்றிய அளவு. மேல் விளிம்புக் கோட்டிலிருந்து பற்களுக்கு இடையே உள்ள பள்ளத்தின் அடி மட்டம் வரையிலான மொத்த ஆழம்

whorl : (மர.வே.) சுருள் பாணி: நெருக்கமாக இல்லாத சுருள் வடிவப் பாணி

wicket ; (க.க) உள் கதவு : பெரிய கதவுக்குள்ளாக அதன் பகுதியாக அமைந்த சிறுகதவு

wick - feed oilers : (எந்.) திரி மசகு : தேக்கி வைக்கப்பட்ட எண்ணெயிலிருந்து வெளிப்படும் திரி மூலம் மசகிடுதல். எண்ணெய்யில் மூழ்கியுள்ள முனையிலிருந்து