பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
677

wing rib; (வானூ.) இறக்கை முதுகு: விமான இறக்கையின் உள் கட்டுமானத்தில் விமான வயிற்றுப்புறப் பகுதியிலிருந்து இறக்கையின் ஊடே அதன் வெளி விளிம்புவரை அமைந்த தண்டு. அதுவே இறக்கைக்கு வடிவத்தை அளிக்கும் அடிப்படைத் தண்டு

wing section; (வானூ) இறக்கைக் குறுக்கு வெட்டு: விமான இறக்கையின் நீளவாட்டு அல்லது வேறு கோணத்திலான குறுக்கு வெட்டுத் தோற்றம்

wing skid: (வானூ.) இறக்கை முட்டு: விமான இறக்கை சாய்ந்து தரையைத் தொடாதபடி தடுக்க இறக்கையின் நுனியின் கீழ் நிறுத்தப்படுகிற முட்டு

wing spar: (வானூ.) இறக்கைத் தண்டு: விமானத்தின் இறக்கையின் உட்புறக் கட்டுமானத்தால் நீளவாட்டில் அமைந்த பிரதான தண்டு

wing tip; (வானூ.) இறக்கை முனை: விமானத்தின் இறக்கையின் வெளிக்கோடி முனை

wing tip flare: (வானூ) இறக்கை முனை வானூர்தி: விமானம் கீழிறங்குகையில் வெளிச்சம் தேவைப்படுமானால் இயக்குவிப்ப தற்கான வாகனம். இது இறக்கை யின் நுனிகளில் பொருத்தப்பட்டிருக்கும்

wing truss: (வானூ.) இறக்கைக் கூடு: விமான இறக்கையின் உட்புறக் கட்டுமான பிரேம்களின் கடு. இணைப்புத் தண்டுகள், கம் பிகள், கேபிள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இதன் வடிவமைப்பின் விளைவாக இறக்கையின் எடை விமானத்தின் உடலுக்கு மாற்றப்படுகிறது

wiped joint: (கம்மி) துடைப்பு ஒட்டு: இரு துண்டுகளை ஒன்றாக வைக்கும்போது இரண்டையும் சூடேற்றி தக்க சூடு ஆந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவ்ற்றின் மீது, உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், குழம்பு நிறையில் ஒட்டுக்கு மேலுள்ள எஞ்சிய உலோகத்தை துடைப்புத் துணி கொண்டு துடைத்து அகற்றுதல்

wiper_(எந்) துடைப்பி; கோண வட்ட இயக்கியின் ஒரு வடிவம், சரிந்து ஏறுகிற அல்லது துடைக்கிற பணியைச் செய்வது

Wire bar: (உலோ) கம்பிப் பாளம்: உருளைகளில் கொடுத்து தண்டுகளாக மாற்றுவதற்கான தாமிரப் பாளம். உருளைக்குள் எளிதில் செருக சரிவான விளிம்பு இருக்கும்

wire brush: கம்பி பிரஷ்: தூரிகைக்குப் பதில் உருக்கினால் ஆன மெல்லிய துண்டுகள் அல்லது கம்பிகளைக் கொண்ட பிரஷ். ஒரு பரப்பின் மீதுள்ள துருசு. அழுக்கு அல்லது வேறு பொருட்களை அகற்றப் பயன்படுவது.

wire cloth (உலோ ) கம்பித் துணி: நெசவு செய்த கம்பியினாலான ஒரு வகைத் துணி

wired edges (உலோ) கம்பி விளிம்பு: ஒரு கம்பியில் அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட உலோ கத் தகட்டின் விளிம்பு.

wire drawing: கம்பி இழுத்தல்: கம்பி தயாரிக்கும் முறை. உலோகத் தண்டு தக்க உலோகத் தட்டின் நடுவே உள்ள ஓட்டை வழியே இழுக்கப்படும்

wire gauge: (எந்.) உயர் அளவு மானி: தயாரிக்கப்படுகிற கம்பி மற்றும் தகடுகளின் குறுக்கு அறை