பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66

auto-suggestion : உள் தூண்டுதல் : ஒருவரின் உள்ளத்தில் உண்டாகும் தற்றுாண்டல். ஒருவர் தான் நோயுற்றிருப்பதாகவும், நோயுறப் போவதாகவும் கருதுதல்

auto transformer : (மின்) ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி : இது மாற்றிக் கொள்ளத் தக்க ஓர் ஈடுகட்டுச் சாதனம்.இதில் மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாலும் திருகு கம்பிச் சுருள் ஒன்று மாறுமின்னோட்டச் சுற்றுகளில் செலுத்தப் பட்டு, அதன் மூலம் அதன் சுருணைகளில் வெவ்வேறு முனைகளில் வேறுபட்ட மின்னோட்டங்கள் பெறப்படுகின்றன. ஒரு கம்பிச் சுருள் மின் விசைமாற்றியிலிருந்து முதல் நிலை மாற்றும் துணை நிலை மின்னோட்டம் பெறலாம்

anxiliary : துணைவினை : பொதுவாக, சார் நிலையான அல்லது துணை நிலையான உதவியை அல்லது ஆதரவினை அளிக்கும் செயல் இழுத்திடும்போது துணைமையான செயல்

auxiliary air intake : (தானி) துணை காற்று உள்வாய் : உந்தூர்தி அதிவேகத்தில் இயங்கும் போது எரி-வளி கலப்பிக்குள் கூடு தலான காற்று செல்வதை அனுமதிக்கும் ஒரு திறப்பு வாய்

anxiliary airport beacon: (வானூ.) விமான நிலையத் துணை வழிகாட்டி ஒளி : இது விமான நிலையங்களிலுள்ள பிரதான வழி காட்டி ஒளிவிளக்குகளை விடக் குறைவான ஒளியாற்றல் கொண்ட ஒரு மான வழிகாட்டி ஒளி விளக்கு, இது விமான நிலைய மனையில் விமான நிலையத்தின் குறிப்பிட்ட இருப்பிடத்தைக் குறித்துக் காட்டுவதற் காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இது தொலைதூரத்திலிருந்து பார்க்கும் போது விமான நிலைய இருப்பிடத்தைக் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பிரதான வழிகாட்டி ஒளிவிளக்கிலிருந்து வேறுபட்டது

auxiliary air-valve carburetor: (தானி. எந்.) துணை நிலைக்காற்று ஒரதர் எரி-வளி கலப்பி : எரிபொருள் கலவையின் திண்மையினைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு காற்று ஒரதர் கொண்ட எரி.வளி கலப்பி

auxiliary airway beacon : (வானூ.) வான்வழித் துணை வழிகாட்டி ஒளி : இது வான் வழியிலுள்ள முதன்மையான வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வான் வழியிலுள்ள நிலப்பகுதியின் சிறப்பு அம்சங்களைக் குறித்துக் காட்டுகிற, அல்லது முதன்மை ஒளிவிளக்குக்குத் துணையாக இருப்பது

average : சராசரி நிரலளவு: இடைநிலையான ஒரு தொகை தர அளவு, பல எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள நிகர அளவு

aviation : (வானூ.) வான்பயணக் கலை : விமானங்களை இயக்குவதற்கான கலை அல்லது அறிவியல்

aviator : (வானூ) வானூர்தியாளர்/வானோடி: காற்றைவிடக் கனமான வானூர்தியின் வலவர்

avodire : (மர) ஆவோடை மரம் : பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கும். இதற்கு அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி இருந்து வருகிறது