பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
679

wood flour ;மர மாவு: மிக நைசாகப் பொடி செய்யப்பட்ட மரம். பொதுவில் ஒயிட் பைன் மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது. லினோலியம் தரை, ரப்பர் ஆகிய வற்றில் உள்ள சிறு ஓட்டைகளை அடைப்பதற்குப் பயன்படுவது

wood pattern making : மரத்தால் ஆன வடிவங்கள் : மரத்தைக் கொண்டு மாடல்கள் அல்லது பிளான்களைத் தயாரிப்பது

wood pulley : (எந்) மர உருளை: இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை)யை விட லேசானது. எனிலும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல

wood screws : (பட்) மர வேலை திருகாணிகள் : மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள் வட்ட, வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப் படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப் பிடிக்கின்ற நிலையிலிருந்து முனைவரை கணக்கிடப்படுகிறது. ஜிம்லெட் கூர்முனை அளவுகள் தரப்படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பலவகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன. அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி

wood turning :மரக்கடைசல்:மரக்கட்டைகளை கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைவது

wood work: மர வேலைப்பொருள்: மரத்தால் ஆன பொருட்கள்

woof : குறுக்கு இழை : நெசவில் அகலவாட்டில் அதாவது குறுக்காக அமைந்த இழை நீளவாட்டிலான பாவு நூலுக்கு நேர்மாறானது

woofer : (மின்.) மூவொலிப் பெருக்கி: குறைந்த அலைவெண் கொண்ட ஒலிகளைப் பெருக்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய ஒலி பெருக்கி, இது உயர் திறன்; ஒலி பெருக்கிகளில் இது பயன்படுத்தப்படுகிறது

work ; வேலை : வேலை என்பது நேரக் கணக்கில் அன்றி அடி/ராத்தல். அங்குலம்/ராத்தல், கணக்கில் கூறப்படுகிறது. (இயற்) விசையை தொலைவினால் பெருக்கி வரும் தொகையானது வேலைக்குச் சமம்

working depth : (பல்லி) செயல் ஆழம் : பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம்

working drawing: (க.க.) செயல் வரைபடம்: எல்லா அளவுகளும், தேவையான பணிக் குறிப்புகளும் கொண்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உதவுகிற வரைபடம்

working gauges : (எந்.) செயல் அளவுமானிகள் : உற்பத்திக்குப் பயன்படுத்துகிற அளவுமானிகளைக் குறிக்கும் சொல்

working load (பொறி.) பணிநிலை பாரம் : ஒரு கட்டுமானம் சாதாரணமாக உள்ளாகிற பாரம். அது அதிகபட்ச பாரம் அல்ல. மாறாக சராசரி பாரம்