பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

680

working sketch : (along.) செயல்முறை புனையா வரைபடம் : இறுதியான வரைபடத்தை வரைவதற்குத் தேவையான பரிமாணங்களையும் பிற விவரங்களையும் காட்டும் முதல் நிலை மாதிரி வரைபடம்

working unit stress : (பொறி.) செயல் யூனிட் அழுத்தம் : இறுதியான அழுத்தத்தை பாதுகாப்பு அலை எண்ணால் வகுத்து வருவது

working voltage : (மின்.) பயன் மின்னழுத்தம் : சுடர் பாய்வு அபாயம் இல்லாமல் ஒரு கொண்மியில் சீராகச் செலுத்தப்படும் உச்ச அளவு மின்னழுத்தம்

work life : (குழை.) பசைக் காலம் : ஒரு செயலூக்கியுடன் அல்லது பிற பொருளுடன் கலந்த பின்னர் ஒரு பசைப் பொருள் உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ள நேரம்

works manager : பணி மேலாளர் : ஒரு தொழிற்சாலையின் ஜெனரல் சூப்ரின்டெண்ட். பல தொழிற்சாலைகளில் பிரதம என்ஜினியர் போன்றவர்

worm-and-gear steering : (தானி.) நெளிதண்டு மற்றும் கியர் ஸ்டியரிங் : ஸ்டியரிங் கியர் தண்டின் கீழ்முனையில் அமைந்த நெளிதண்டுடன் கூடிய ஏற்பாடு. நெளிதியர் குறுக்குத் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தகுந்தபடி பொருத்தியுள்ளதா என்று சரி பார்த்து அமைக்க இயலும்

worm drive : (தானி.) நெளிதண்டு இயக்கம் ;' பெவல் பல்லிணை பிணியன் அல்லது செயின் மூலமாக இல்லாமல் நெளிதண்டும் சக்கரமும் இணைந்த செயல்மூலம் இயங்குவது

worm gearing : (பல்லி.) நெளி பல்லிணை : திருகுபுரி பல்லிணையும், பல்சக்கர பல்லிணையும் இணைந்த பல்லிணை

worm threads : (எந்.) நெளிபுரி : இப்புரிகள் ஆக்மி வகையைச் சேர்ந்தவை. 29 டிகிரி கோணத்தில் அமைந்தவை. எனினும் தரப்படுத்தப்பட்ட ஆக்மி புரியைவிட ஆழமானவை

wove paper : வலைச்சட்டக் காகிதம் : நெருக்கமான வலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதம். இதில் நீரோட்டம் இராது

wreath : (க.க.) படிகளின் வளை கைப்பிடி :. மாடிப்படியின் கைப்பிடியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வளைந்த பகுதி. மாடிப்படியின் துவக்கத்தில் கீழே உள்ள தாங்கு தூணுடன் பக்கவாட்டில் இணைக்கப்படுவது

wreath piece : (க.க.) மாடிப்படி வளை கைப்பிடித் துண்டு : சுழன்று செல்லும் மாடிப்படிகளின் வளைந்து வளைந்து செல்லும் கைப்பிடியின் ஒரு பகுதி

wrecking bar : (எந்.) பாடழிவுக் கைப்பிடி : பொதுவில் ஒன்று முதல் இரண்டு அடி நீளமுள்ள உருக்குத் தண்டு. ஒரு முனையில் மெல்லிய விளிம்பு இருக்கும். மறுமுனை வளைந்து பிடிமானத்துக்கு உகந்தபடி குழிவுடன் கூடிய பல் இருக்கும்

wrench : (எந்.) திருகுக் குறடு : சாதாரண வகைகள் நட்டுகளுக்கு ஏற்ப எளிதில் மாற்றிக் கொள்ளத்தக்கவை. மங்கி குறடு, இரட்டைமுனை குறடு, 'எங்' குறடு, பாக்ஸ் குறடு, டி குறடு, துளைக்குறடு முதலியவை (எந்திர) போல்ட் அல்லது நட்டுகளைத் திருப்புவதற்கு விசையைச் செலுத்துவதற்கான இசைக் கருவி

wrinkling : (வண்;அர) திரளுதல் : பெயின்ட் அல்லது வார்னிஷ்