பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
683
Y

yagiantenna : (மின்.) யாகியான் அலைவாங்கி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட இயக்கு கம்பிகள் உடைய மின்அலை வாங்கிகளின் தொகுதி.

yard : (க.க.) முற்றம் : ஒரு கட்டிடத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுற்று வட்டகை வெளி.

yardage : (பொறி.) யார்டேஜ் : எவ்வளவு மண்தோண்டப்பட்டது என்பதை கன கெஜத்தில் குறிப்பிடுவதற்குப் பயன்படும் சொல்.

yard stick : கெஜக்கோல் : 91 செ.மீ. நீளம் கொண்ட, அளவுகள் குறிக்கப்பட்ட நீண்ட மெல்லிய மரச்சட்டம், உலோகத்தில் செய்யப்பட்ட அவ்வித அளவு கோல் 36 அங்குல அளவுகோல் எனப்படுகிறது.

yaw : (வானூ.) திருக்கை : பறக்கும் பாதைக் கோட்டிலிருந்து கோண இயக்கத்தால் விமான அச்சிலிருந்து வலது புறம் அல்லது இடம் புறம் திரும்பும் போக்கு.

yaw meter : (வானூ.) திருக்கை அளவுமானி : ஒரு விமானத்தின் திருக்கையின் கோணம் எவ்வளவு என்று அளந்து கூறும் கருவி.

Y-axis : (மின்.) ஒய்-அச்சு : ஓர் அறுகோணப் படிவத்தின் முகங்களுக்குச் செங்கோணமாக வரையப்பட்டுள்ள அச்சு.

Y connection : (மின்.) ஒய் இணைப்பு : மூன்று பேஸ் சர்க்கியூட்டில் பயன்படுகிற கிளை இணைப்பு.

Y-cut crystal : (மின்.) ஒய் வெட்டுப் படிகம் : ஒய்-அச்சுக்குச் செங்குத்தாக வெட்டப்பட்ட ஒரு படிகம்.

year ring : (மர.வே.) ஆண்டு வளையம் : இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும் ஓர் ஆண்டைக் குறிக்கும். மரம் வளருகையில் சாறு இவற்றின் வழியே தான் உயரே செல்கிறது.

yeast : நொதி (ஈஸ்ட்) : சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள். இது உயிருள்ள பூஞ்சணம் போன்ற ஒரு பொருள். சர்க்கரையை ஆல்ககலாக மாற்றும் பொருளும் இது தான். நொதியானது, புரதங்களை உற்பத்தி செய்கிறது. சிறிதளவிலான இந்தப் புரதங்கள், தாங்கள் மாறாமல் பெருமளவு வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது. இந்தப் புரதங்கள்தாம் சர்க்கரையிலும் வேதியியல் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.

yellow : (வண்.) மஞ்சள் : அடிப்படை நிறம். நிறமாலையில் சிவப்புக்கும், பச்சைக்கும் இடையே அமைந்துள்ளது.

yellow brass : (உலோ.) செம்பித்தளை : 70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும்