பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
684

போது இது பயன்படுத்தப்படுகிறது

yellow fever (yellow jack): (நோயி.) மஞ்சள் காய்ச்சல் : மஞ்சள் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய். ஒரு வகைக் கொசுவினால் உண்டாகும். இந்நோயின் விளைவாக, சிறுநீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும். தோல் மஞ்சள் நிறமாகும். கருநிறத்தில் வாந்தி ஏற்படும்

yellow ocher : (உலோ.) மஞ்சள் பித்தளை : 70 பங்கு தாமிரமும், 30 பங்கு துத்த நாகமும் கலந்த கலோகம். இது மட்டரகக் கலோகம். உறுதி தேவையற்ற கனிமங்களுக்குப் பயன்படுவது

yellow ocher : (வண்.) மஞ்சள் காவி : மண் போன்ற இரும்புக் கனியிலிருந்து பெறப்படும் நிறம். பெயின்டுகளில் சாயம் அளிக்கப் பயன்படுவது

yellow pine : (மர.வே.) மஞ்சள் ஊசியிலை : என்றும் பசுமை மாறாத மரம் இரு வகைப்பட்டது. ஒன்று நீண்ட இலை. மற்றொன்று குட்டை இலை நீண்ட இலை ஊசியிலை வகையின் மரம் அடர்த்தியாக இருக்கும். கனமாகவும், உறுதியாகவும் இருக்கும். பெரும்பாலும் கனத்த உத்திரங்களாகப் பயன்படுத்தப்படும். குட்டை இலை வகை எளிதில் முறியும். அவ்வளவு உறுதியற்றது. விலையும் குறைவு. செலவு குறைந்த தரைத் தளமாகவும், இதர வகைகளிலும் பயன்படுவது

yellow spot : (நோயி.) மஞ்சள் புள்ளி : கண்விழிப்புறத்திரைக் கூர் நோக்கிடப்புள்ளி

yew : (மர.வே.) யூ மரம் : மெதுவாக வளருகின்ற நடுத்தர அளவுள்ள பசுமை மாறாத மரம். மரத்தின் உள்ளே துணுக்குகள் அடர்ந்து கெட்டியாக இருக்கும். சற்று நெகிழும் தன்மை கொண்டது. ஆரஞ்சு சிவப்பு முதல் பழுப்பு வரையிலான நிறம் கொண்டது

yield point : (எந்.) முறி நிலை : மாதிரி உலோகத் துண்டு மீது கூடுதல் பளுவைச் சேர்க்காத நிலையில் அது விரிந்து கொடுக்கத் தொடங்கும்போது உள்ள நிர்ப்பந்தத்தின் அளவு

yield strength : (பொறி.) வலிமை இழப்பு நிலை : ஒரு உலோகப் பொருள் நிரந்தரமாக நீண்டு போகின்ற நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் பளு

yield value : (குழை.) இளகு நிலை : பிளாஸ்டிக் திர்வம் போன்று பாய்வதற்கு மிகக் குறைந்தபட்ச அழுத்த நிலை.இதற்கும் குறைவான அழுத்தத்தில் பிளாஸ்டிக் நெகிழும் கொண்ட திட வடிவில் இருக்கும். இந்த நிலைக்கும் அதிகமான அழுத்தத்தில் பிசுபிசுப்பான திரவமாக இருக்கும்

yoke : (க.க.) மேல் குறுக்கு : பலகணிச் சட்டத்தில் மேற் குறுக்குச் சட்டம். (தொலை) மின்னணுக் கற்றையை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் திருப்பிவிட மின்னணு காமிரா அல்லது படக் குழாயின் கழுத்துப் பகுதியில் அமைந்த சுருள்கள்

yolk : (உயி.) மஞ்சள் கரு :முட்டையிலுள்ள மஞ்சள் கரு

yolk-sac (yolk-bag) : (உயி.) மஞ்சள் கருப்பை : முட்டை மஞ்சள் கருப்பொதிவு இழைப்பை

Y-signal : (மின்.) ஒய்-சமிக்கை : தொலைக்காட்சியில் ஒளிரும் சமிக்ஞை