பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

686

zinc chromate : துத்தநாகக் குரோமேட் (துத்தநாக மஞ்சள்) : துருப்பிடிக்காத முக்கியமான பண்புகளையுடைய உலோக நிறமி

zing oxide : (வேதி.) துத்தநாக ஆக்சைட் : துத்த நாக கார் பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகப் பவுடர். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது

zinc sulphate : (Gao.) துத்தநாக சல்பேட் : கழிவு துத்தத் துண்டு களை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவும், மரம் மற்றும் தோல்களை கெடாமல் காக்கவும் பயன்படுவது

zing white : (வண்.) துத்த வெள்ளை : பெயின்ட் தயாரிப்புக்கு நிறமியாகப் துத்த நாகப் பவுடர்

zinox : (வண்.) ஜினோக்ஸ் : எனாமல் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் துத்தநாக ஹைட்ரேடட் ஆக்ஸைட்

zoom : (வானூ.) செங்குத்தான ஏற்றம் : விமானம் செங்குத்தாக உயரே ஏறுவது. அப்போது உயரே ஏறுகின்ற விகிதமானது. சீராகப் பறக்கும்போது கிடைப்பதை விட அதிக அளவில் இருக்கும்

zoom lens (zoomar) : அணுக்க நிரலீட்டுக் கண்ணாடி : தொலைக்காட்சிப் பட எடுப்பில் படக்கருவியைப் புடை பெயர்க்காமலே தொலை அணிமையாக்கும் திறமுடைய கண்ணாடியமைவு

zoonosis : தாவு நோய் : விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய்

zyglo : (உலோ.) சைக்ளோ : காந்தத் திறனில்லாத உலோகங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பயன்படும் ஒளிர்ந்து ஊடுருவும் ஆய்வுச் சோதனை

zyme : (நோயி..) புளிமா : நோய்க்கிருமி

zymosis : (நோயி.) புளிப்பூட்டம் : நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு

zymurgy : (வேதி.) புளிக்காடியியல் : மதுப்புளிக்காடி பற்றிய வேதியியல்