பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67

avionics : (மின்னி.) வான்பயண மின்னணுவியல் : வான்பயண மின்னணுவியலைக் குறிக்கும் சொல்

A. w. G. (American wire gauge): அமெரிக்கக் கம்பி அளவி; மின்னியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கம்பிகளின் வடிவளவினைக் கணக்கிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு தர அளவு

awi : தமருசி : ஆணிகளிலும் திருகாணிகளிலும் இழையாகப் பயன்படும். தோலிலும் துளையிடுவதற்கான ஒரு சிறிய கூர்நுனியுடைய கருவி

awl haft : தமருசிக் கைப்பிடி

axial force : (பொறி.) ஊடச்சு விசை: பட்டக வடிவிலான ஒரு பொருளின் பகுதியின் மீது ஒரே சீராகச் செயற்படுகிற ஒரு விசை. இதனால், அதன் இணைவாக்க விளைவு, அந்தப் பொருளின் ஊடச்சுக்கு ஒருங்கிணைவாக இருக்கிறது

axial leads :(மின்.) ஊடச்சு முனைகள்: ஓர் உள்ளுறுப்பின் ஊடச்சுடன் இணைக்கப்பட்டுள்ள முனைகள்

axial pitch :ஊடச்சு இடை வெளியளவு : இதனைப் பொதுவாக 'இடை வெளியளவு' என்று அழைப்பர். ஒரு சுற்றுக்கு முன்னேறும் தூரத்தின் அளவு

axial - type engine: (வானூ) ஊடச்சு வகைப் பொறி : பிரதான சுழல், தண்டுக்கு இணையாகவும்,அதிலிருந்து சமதூரத்திலும் உள்ள நீள் உருளைகளைக் கொண்ட ஒரு பொறி.இதில் ஒரு அரைவட்டத் தகடு, அல்லது சுழல் பல்வெட்டுத் தகடு அல்லது பல்லிணைப்புகள் வாயிலாக சுழல் தண்டுக்கு விசை மாற்றப்படுகிறது

axiom:(கணி.) வெளிப்படை உண்மை : உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மைத் தத்துவம்

axis : (கணி.) செங்கோடு; சில வடிவ கணித அல்லது எந்திரவியல் தொடர்புகளுக்கு இணையாகக் கருதப்படும் ஒரு நடுக்கோடு. ஒரு பொருள் எந்தப் புள்ளியைச் சுற்றி அல்லது எந்தக் கோட்டின் மீது சுழல்கிறதோ அந்தப் புள்ளி அல்லது கோடு

axis of symmetry: (வடி) செவ்வொழுங்கு அச்சு: இது ஒரு கற்பனையான மையக்கோடு. இதனைச் சுற்றி செவ்வொழுங்கான வடிவ உருவம் உருவாக்கப்பட்டு, அதில் புவியீர்ப்பு மையம் குறிக்கப்படுகிறது

axis of a weld: பற்றாசு ஊடச்சு : பற்றவைப்பு உலோகத்தின் புவியீர்ப்பு மையத்திற்கு நெடுகிலும், பற்றவைப்பு உலோகத்தின் குறுக்கு வெட்டுப் பகுதிக்குச் செங்குத்தாகவுள்ள ஒரு கற்பனைக் கோடு

axle: இருசு; உந்துார்தி, பாரவண்டி. தள்ளுவண்டி முதலியவை போன்ற ஊர்திகளின் சக்கரங்களை தாங்கியுள்ள சுழல் தண்டு அல்லது சாதனம்

axon : (உட.) நரம்பணு வால்: ஓர் உறுப்பில் நரம்பு முடிவடையும் இடத்திலுள்ள அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை