பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

B


b.x. : (மின்.) பி. எக்ஸ். : நெகிழ் திறமுடைய ஒரு கவச வடத்தின் வாணிகப் பெயர்

babbitt : (தானி.) பாபிட் : வெள்ளியம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

babbitts metal : (உலோ.) மென் உலோகக் கலவை : உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளியம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும் எந்திரங்களிலும், பொறிகளிலும் தாங்கிகளுக்கு மசகு ஊட்டுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது

back முதுகுப் பகுதி :

(1) ஏடு முதலியவற்றின் மூட்டுப் பகுதி (2) விலங்கினத்தின் மேற்பகுதி

backband : (க.க.) பின்கட்டுத்தளை : ஒரு கட்டுமானச் சுவருக்கும் ஒரு சன்னலின் அல்லது கதவுக் கவிகையின் புறமுகப்புக்கும் இடையிலான இணைப்பை மூடியிருக்கும் வார்ப்படம் அல்லது மறைப்பு

backed up : (அச்சு.) பின்னிடைவுத் தாள் : இருபுறங்களிலும் சீராக அச்சிடப்பட்ட தாள்கள் "தவறான பின்னிடைவு" எனக் குறிப்பிடுவது தவறாக அச்சிட்டிருப்பதைக் குறிக்கும்

back electromotive force : (மின்.) எதிர்மின்னியக்கு விசை : அழுத்தப்பட்ட மின்னோட்டத்திற்கு எதிர்மாறான திசையில் ஒரு மின்னோட்டத்தைப் பாய்ச்ச முனைகிற அல்லது பாய்வதை எதிர்க்கிற மின்னியக்க விசையினை இது குறிக்கிறது

back filling : (க.க) : பின்னடைதூர்ப்பு (தொல் பொருளியல்) : வடிகால் அமைப்பதற்காக ஒர் அடித்தளத்திற்கு அல்லது நில்வறைக்கு வளியேயுள்ள உடைந்து போன கல்லின் அல்லது மற்ற கரடுமுரடான பொருளின் இடைவெளியை இட்டு நிரப்புதல்

back fire : (தானி; எந்.) தவறித் தீப்பற்றுதல் : உள்வெப்பாலை முதலியவற்றில் குறைபாடுடைய ஒரதர்கள், காலத் தாமதம், எரி பொருள் கலவையிலுள்ள குறைபாடு ஆகியவை காரணமாகக்கால இடந்தவறித் தீப்பற்றுதல், பல் புழைவாய் எந்திர அறையில் உண்டாகும் வெற்றிடம், பின்னோக்கிய பயணத்திற்காகத் தீப்பற்றச் செய்கிறது

backfire : (பற்.) எதிர் அனல் பொறி : உள் வெப்பாலை முதலியவற்றில் தூலம், இடந்தவறித் தீப்பற்றுதல்

back flow : (கம்.) பின்னோட்டம் : நீர் அல்லது சாக்கடை நீர் அதன் வழக்கமான போக்கிலிருந்து மாறி நேர் எதிர்த்திசையில் பாய்தல்

backflow valve : (கம்.) பின்னோட்ட ஓரதர் : சாக்கடை நீர் பின்னோக்கிப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக வீடுகளின் அல்லது பிறகட்டிடங்களின் வடிகால்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனம். வடிகாலில் சாக்கடை நீர்ப்