பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பெருக்கம் ஏற்படும்போது அந்த நீர் பின்னோக்கிப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்துவிடாமல் காப்பதும் வடிகாலுக்குச் சேதம் ஏற்படாமல் காப்பதும் தடுப்பதும் இதன் முக்கிய வேலை

back gear : (எந்.) பின்பல்லிணை : இது பல்லிணைச் சக்கரங்களின் ஓர் அமைப்பு முறை. ஒரு கடைசல் எந்திரத்தின் தலைப்பாகில் உள்ளது போன்ற இயக்கும் வார்ப்பட்டையின் விசையை இதன் மூலம் அதிகரிக்கலாம்

backhand welding: (பற்.) பின்புறப் பற்றவைப்பு : வாயுச்சுடர் எட்டும் திசைக்கு எதிர்த்திசையில் பற்றவைத்தல்

backing : (அச்சு.) பின்னிடைவு :

(1) நூலின் பின்பகுதியை அதன் உறையினுள் பொருந்த அமையுமாறு வலுப்படுத்தி வடிவாக்கம் செய்தல்

(2) மின் அச்சு முறையில், செப்புக் கலத்தைத் திண்மையாக்குவதற்காக அதில் உலோகத்தை இட்டு நிரப்புதல்

backing brick : (க.க.) பின்னிடைவுச் செங்கல் : ஒரு செங்கற்சுவரின் உட்பகுதி. இது பெரும்பாலும் சுவரின் முகப்புப் பகுதிக்காகப் பயன்படுத்தப்படும் செங்கல்லை விட மலிவானதாகவும், செம்மையற்றதாகவும் உள்ளது

backing lamp : (தானி; எந்) பின்னிடைவு விளக்கு : பொதுவாக மின் விளக்கும், தடுப்பு விளக்கும் ஒருங்கிணைந்துள்ள ஒரு வகை விளக்கு. இது சீருந்து பின்னோக்கிச் செல்லும்போது மட்டுமே எரியும்

backing of a joist or rafter : (மர; வேலை.) துலாக்கட்டை அல்லது இறைவாரக்கைமர ஆதாரம் : துலாக்கட்டைகளின் அகலம் மாறுபடுவதால் சமமட்டமுள்ள தளங்களை அல்லது முகடுகளை அமைப்பதற்காக, மேல் மட்டங்கள் அனைத்தும் ஒரே மட்டத்திற்கு வரும் வரையில் குறுகலான கட்டைகளைச் சம சதுக்கக் கட்டைகளாககுதல

backing of a wall : சுவரின் பின்னிடைவு : ஒரு சுவரின் கரடுமுரடான உள்முகப்புகாரை உடைந்துபடாமற் காக்கும் அணை சுவருக்குப் பின்னால் படுக்கையமைப்பாக இடப்படும் நிரப்புப் பொருள்

backing off : (பட்.) பின்னிடைவு நீக்கம் : வெட்டும்போது ஏற்படும் உராய்வினைக் குறைப்பதற்காக, வெட்டு முனையின் பின்புறமுள்ள உலோகத்தை அகற்றி விடுதல். குழாய்களில் அல்லது உலோகத் துளைப்பான்களில் இதனைக் காணலாம்

backing out : ( உலோ; வே.) பின்னிடைவு நீட்டம் : ஒரு குழாயில் அல்லது வார்ப்புருப்படிவக் கட்டையில் புரியை வெட்டி எடுத்தபிறகு எஞ்சியிருக்கும் பகுதி

backing plate : (குழை.) பின்னிடைவு தகடு : உட்புகுத்திப் பள்ளம் நிரப்பிச் செய்யப்படும் வார்ப்படத்தில், உட்புழையுள்ள அச்சுக்கட்டைகள் இயக்கு முளை, இருசு உருளைகள் முதலியவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு தகடு

backing-up : (க.க)

(1) பின்னிடைவு ஆதாரம் : ஒரு சுவரின் உள் முகப்புக்கு குறைந்த தரமுடைய செங்கற்கற்களைப் பயன்படுத்தி ஆதாரம் அமைத்தல்

(2) பின்புற அச்சு : (அச்சுக்கலை) ஒரு காகிதத்தில் இரண்டாம் பக்கத்தில் அச்சடித்தல்