பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


backlash : (தானி; எந்.) பின்னுதைப்பு : இயக்கும் அழுத்தம் மாறுபடும் பொழுது பல்லிணைகளின் ஒர் இணை அல்லது ஒரு தொடர் பின்னோக்கி நகருதல். இது பற்களுக்கு இடையில் விடப்படும் இடைவெளியின் அளவுக்குச் சமமானதாக இருக்கும்

back light : பின்புற ஒளி : ஒரு பொருளுக்கு அதன் பின்புலமுள்ள ஓரிடத்திலிருந்து ஒளியூட்டுதல்

backout : (விண்.) எதிர்முகக்கணிப்பு : ஏற்கெனவே செய்து முடித்த செயல்களை எதிர்முகமாகச் செய்தல்

back pressure : (தானி; எந்.) எதிர் அழுத்த விசை :

(1) எந்திரவியல் ஒர் எஞ்சினில் தவறான காலத்திட்ட அமைப்பு, கரிமம் படிதல், அழுக்கடைந்த ஒசை மடக்கத் திண்டு ஆகியவை காரணமாக அந்த எஞ்சின் அதன் முழு ஆற்றலுடன் இயங்கத் தடை ஏற்படுகிறது. இதனால், எஞ்சினுடைய நீள் உருளைகளில் எதிர்முகமான விசை உண்டாகிறது. இதுவே எதிர் அழுத்த விசையாகும்

(2) குழாய்களிலுள்ள காற்றழுத்தம் வாயு மண்டல அழுத்தத்தை விட அதிகமாக இருத்தல்

back - rake : (எந்.) பின்சரிவு வறண்டி : நுனியிலிருந்து பின்னோக்கிச் சரிந்து செல்லும் சாய்வினைக் கொண்ட வெட்டுகருவி

backrest : (எந்.) பின்னடை ஆதாரம் : கடைசல் செய்தல் அல்லது பட்டையிடுதல் போன்ற வேலைகளின்போது நுட்பமான பொருள்களுக்கு அமைக்கப்படும் ஆதாரம்

backsaw (மர.வே.) தடித்த புற முடை ரம்பம் : கத்திக்கு வலுவேற்றுவதற்கு முதுகுப்பகுதியில் விளிம்புடைய உலோக ரம்பம். இது மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்த்துணை செய்யும் ஒர் அமைவு ஆகும். இதனைப் பொருத்து முனை ரம்பம் அல்லது இசைப்புக் கூர் ரம்பம் என்றும் கூறுவர்

ரம்பம்

back siphonage . (கம்.) எதிர் தூம்புக்குழாய் இயக்கம் : தும்புக் குழாய்களில் அழுத்தம், வாயு மண்டல அழுத்தத்திற்குக் குறைவாக எதிர்மறை அழுத்தமாக இருத்தல்

backup : (அச்சு.) பின்புற அச்சு : ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் மறுபுறத்தில் அச்சிடுதல்

backup side : (அச்சு.) பின்புற அச்சுப் பக்கம் : ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் எதிர்ப்புறம்

back wave : (மின்.) எதிர் அலை : தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல்

bacteriology : (உயி.) பாக்டீரியாவியல் : பாக்டீரியா என்ற நுண்மங்கள் பற்றி ஆராயும் உயிரியல்.

bacteriolysion : (உயி.) நுண்ம அழிப்புப் பொருள் : நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்

bacteiolysis : (உயி.) நுண்ம அழிவு : உயிரின் தற்காப்புப் பொருளால் தோன்றும் நுண்ம அழிவு

bacteriosis : (நோயி.) நுண்ம நோய் : நுண்மங்களால் ஏற்படும் செடியின் நோய்.