பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

 bacteriostasis : (நோயி.) நுண்ணுயிர் அடக்கி/நுண்ம வளர்ச்சித்தடை பாக்டீரியா போன்ற நுண்மங்கள் உடலில் வளர்வதைத் தடுத்தல்

bacteriostatic : (நோயி.) நுண்மவளர்ச்சித் தடைப்பொருள் : பாக்டீரியா போன்ற நுண்மங்கள் வளர்வதைத் தடுக்கும் பொட்டாசியம் குளோரேட் போன்ற பொருள்கள்

bacteriumi (உயி.) பாக்டிரியம் : மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்களையும் உண்டாக்குகின்றன. எனினும், பெரும்பாலானவை பயனுடையவை. சில பாக்டீரியாக்கள் மண்ணில் வீழும் இறந்த உயிர்களை மட்கச் செய்து மண்ணோடு கலந்துவிடச் செய்கின்றன. வேறு சில பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து நைட்ரஜனை நிலைப்படுத்தித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. பாக்டீரியா பற்றி ஆராய்வது பாக்டீரியாவியல் எனப்படும்

bad colour : (அச்சு.) தவறான வண்ணம் : அச்சிட்ட தாளில் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக மை படிந்து உண்டாகும் தோற்றம்

bad copy: (அச்சு.) சீர்கேடான எழுத்துப்படி : எளிதில் படிக்க முடியாத அளவுக்குச் சீர்கேடாகவுள்ள எழுத்துப்படி

badger : (1) கரடி மயிர்த் துரிகை : கரடியின் மயிராலான ஒவியத் தூரிகை

(2) அகல்தளப்பரப்பு : சாய்வான வாயை உடைய அகன்ற மூலைப் பொருத்துவாய் கொண்ட தளப் பரப்பு

baffle (தானி.) தடுக்குத் தகடு : நீர், காற்று, வாயு, ஒலி போன்றவற்றின் போக்கினைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு

baffle plate : போக்கு மாற்றத் தகடு : நீர்த்தன்மையுள்ள பொருளின் அல்லது வாயுவின் போக்கினைத தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு

bagasse : (குழை.) கரும்புச்சக்கை : கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் கழிவுப் பொருள். இது காகித அட்டைகள் தயாரிக்கப் பயன்படுகிறது

bag moulding : (குழை.) புடைப்பு வார்ப்படம் : இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்குள் இறக்கப்பட்டு, பொருத்தப்பட்டு, காற்றழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாகத் கட்டுறுதி வாய்ந்த வார்ப்படத்தில் அழுத்தப்பட்டு, வார்ப்பு வடிவம் தயாரிக்கப்படுகிறது

bail : அரை வளையம் : வண்டி குடை சாய்வதைத் தடுக்கக்கூடிய குதிரை லாட வடிவிலான ஒர் அரை வளையம்

bail out : (வானூ.) வெளியிறங்குதல் : வானூர்தியிலிருந்து குடை மிதவை மூலமாகக் கீழே இறங்குதல்

bakelite : (குழை.) பேக்கலைட் : சூட்டால் நிலையாக இறுகிவிடுந் தன்மையுடைய குழைமைப் பொருள்களின் ஒரு தொகுதியைச்