பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73

சேர்ந்த ஏதேனும் பொருளுக்கான வாணிகப் பெயர். இது கடினமான ரப்பருக்கு அல்லது செல்லுலாய்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைப் பிசின்.

baker - nunn camera : (விண்.) செயற்கைக்கோள் தடக்கண் காணிப்பு ஒளிப்படக்கருவி : செயற்கைக் கோள்களின் தடத்தைப் பின் தொடர்ந்து கண்காணிப்பதற்குப் பயன்படும் ஒரு பெரிய ஒளிப்படக் கருவி.

balance : (வானூ.) சமநிலை : (1) வான் (பயணவியல்) வானூர்தி சீராக வானில் பறக்கும்போது இணைவாக்க விசைத் திறனும், நெம்புதிறனும் பூஜ்ஜியமாக இருக்கின்ற ஒருநிலை.

(2) (கலை.) கண்ணுக்கு மிகவும் கவர்ச்சியாக அமையும் வகையில் ஒரு கலைப்படைப்பின் உறுப்புகள் அமையுமாறு செய்தல்.

(3) (அச்சுக்கலை.) அச்செழுத்துக் கோப்பு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் போது, அவை பொருண்மையில் சமநிலையில் இருக்குமாறு அமைத்தல்.

(4) (எந்திரவியல்) எடைகளை நுண்ணியதாக நிறுத்திடக்கூடிய துலாக்கோல்.

balanced amplifier : (மின்.) சமநிலை மின்பெருக்கி : தள்ளுவிசை இழுப்பு விசை மின்பெருக்கியாக அல்லது தள்ளுவிதை, தள்ளுவிசை-மின்பெருக்கியாக இரு குழல்களை பயன்படுத்தும் மின்பெருக்கி

balanced backflow valve : (கம்.) சமநிலை பின்னோக்கப்பாய்வு ஓரதர் : பின்னோக்கிப் பாய்வதற்கான வாயில் உள்ள ஒரதர்

balanced circuit : (மின்.) சமநிலைச் சுற்றுவழி : ஒன்றுக்கொன்டான தூண்டலின் விளைவினைத் தவிர்ப்பதற்காக அருகிலுள்ள மின்னோட்டச்சுற்று வழிகளுக்கிணங்க சரியமைவு செய்யப்பட்ட ஒரு மின்னோட்டச் சுற்றுவழி. ஒரு நிலைக் கம்பியின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே அளவு மின்விசையைக்கொண்ட ஒரு முக்கம்பி அமைப்பு

balanced core : (வார்.) சமநிலை உள்ளகம் : ஒரு முனையில் மட்டுமே ஆதாரமுடைய ஒர் உள்ளகம்

balanced modulator : (மின்.) சமநிலை அலைமாற்றி : தள்ளுவிசை இழுப்பு விசையில் ஆல்லது தள்ளு விசை-தள்ளுவிசையில் இரு குழல்களைப் பயன்படுத்தும் அலை மாற்றி. இதில் ஊர்தி அலைவெண் நீக்கம் செய்யப்படுகிறது. ஊர்திகள், ஒலி அலைமாற்றிச் சைகை ஆகியவற்றின் அலைவெண்களின் கூட்டுத் தொகையினையும்_வேறு பாட்டின்னையும் மட்டுமே வெளிப்பாடு கொண்டிருக்கும்

balanced pulleys : சமநிலைகப்பி : தாங்கிக்ளின் மீது அளவுக்கு மீறி தளர்ச்சி ஏற்படுவதைத் துடுப்பதற்காக, செயலிண்மையின் போதும் இயங்கும்போதும் சம நிலைவில் இருக்குமாறு அமைக்கப்பட்ட ஒரு கிப்பி

balanced surface : (வானூ.) சமநிலை மேற்பரப்பு : சுழல் முனையின் இரு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு கட்டுப்பாட்டு மேற்பரப்பு. சுழல் முனையைச் சுற்றிக் காற்றின் இயக்கத்தைக் குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும்

balance dynamic or running : (பட்.) சமநிலை விசையியக்க அல்லது ஓட்டமுறை : சுழல்தண்டுகளை அல்லது கிப்பிகள் அதிர்வு இல்லாத முறையில் ஒடுவதற்கு எற்ற வகையில் எடையினை உரியவாறு பகிர்ந்து வைத்தல்