பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

balance, static or standing : (பட்.) சமநிலை அசைவற்ற அல்லது நிலைபெற்ற : கப்பிகளை அல்லது சுழல் தண்டுகளை கத்தி முன்னகளில் வைக்கும்போது, அவை எந்த நிலையிலும் நின்று கொள்ளும் வகையில் அவற்றின் எடைகளைப் பகிர்ந்து வைத்தல். சமநிலை இல்லாவிடில், கனமான பகுதி, அடிமட்டத்திற்கு உருண்டு சென்றுவிடும்

balance weight : சமநிலை பேணும் எடைமானம் : முழுமையான சமநிலை கிடைக்கும் வகையில் ஒரு சக்கரத்தின் உள் விளிம்பில் வைக்கப்படும் எடை. இந்த எடைமானம், ஒரு நெம்புகோலின் முனையின் மீது சறுக்கிச் செல்லும். இயங்கும் பகுதி ஒன்றின் சரிசம எதிர் எடையாக அதனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும்

balance wheel : எந்திர இயக்குச் சக்கரம் : இது எந்திரத்தின் விசையைச் சீராக இயங்கும்படி கட்டுப்படுத்தும் ஓர் அமைவு ஆகும்

balancing machine : சமன்செய் பொறி : ஒரு சுழலும் தண்டு, சம நிலை பிறழ்ந்து இயங்கும்போது அது எந்த அளவுக்குச் சமநிலை பிறழ்ந்துள்ளது என்பதைக் கணக்கிட்டுக் காட்டி, அதனை எந்த அளவுக்குச் சீர்படுத்தவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பொறியமைப்பு

balancing way : (பட்.) சமன்செய் தடம் : சுழல் தண்டுகள் அல்லது கப்பிகள் நிலைபெற்ற சம நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக அமைந்த தள மட்ட வார்ப்பட்டை அல்லது கூரிய முனைத் தகடு. இந்தத் தகடு பொதுவாகக் குண்டு தாங்கிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்

balcony : மாடி முகப்பு : மாடிக் கட்டிடத்தின் சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு மேடை அல்லது மாடம், இதனைச் சிறுதுண் வரிசைத் தொகுதி அல்லது கைப்பிடிச் சுவர் சூழ்ந்திருக்கும்

balk : (மர. வே.) தூல விட்டம் : ஒரு சதுர உத்தரம் அல்லது மரத்தூலம்

balk ring : (தானி; எந்.) தூல வரி வளையம்: பல்லிணைப்புகள் சீராக இயங்குவதற்கு உராய்வினை முறை படுத்தக்கூடிய அடைகோல் அல்லது குண்டலம்

ball and claw foot : பந்து மற்றும் வளைநகக் கால் : ஒரு வளை நகத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஒரு பந்தினைப் போன்று செதுக்கப்பட்ட கால்

ball and socket joint : (உL.) பந்துக் கிண்ண மூட்டு : எலும்புகளுக்கிடையிலான மூட்டு. இதில் ஒர் உறுப்பின்முனை உருண்டையாகவும், இன்னொரு உறுப்பின் முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது

பந்து கிண்ண மூட்டு

ballast : சரளைக் கல் : சாலை இருப்புப் பாதையின் உடைகல்லாலான அடிபரப்பு

ball bearing : (தானி; எந்.) குண்டு தாங்கி : உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்

ball check valve : குண்டுத் தடுப்பு ஓரதர் : இத்தகைய ஒரதர் இயங்கும் பகுதி ஓர் இருக்கையில்