பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75

பொருந்தியுள்ள ஒரு குண்டு ஆகும். அழுத்தம் ஏற்படும்போது இந்தக் குண்டு அதன் இருக்கையினின்றும் எழுந்து ஒரு திசையில் பாய்வதற்கு வழிவிடும். அழுத்தம் நீங்கியதும் அல்லது அழுத்தம் எதிர்த்திசைக்கு மாறும்போது இந்தக் குண்டு தன் இருக்கையில் மீண்டும் பொருந்தி அடைப்பினை உண்டாக்கும்

ball clay : உருண்டைக் களிமண் : மண்பாண்டம் செய்பவர் தமது சுழல் சகடத்தின் மையத்தில் உருண்டையாகத் திரட்டி வைக்கும் களிமண். இந்தத் திரள் களி மண்ணிலிருந்து அவர் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களைச் செய்கிறார்

ball cock : (கம்.) குண்டு அடைப்யான் : நீரின் மேற்பரப்பில் ஒரு குண்டு விழுவதால் அல்லது எழுவதால் திறக்கப்படுகிற அல்லது மூடப்படுகிற ஒரு திறப்படைப்பக் குழாய்

balling : (உலோ) பந்துருவாக்குதல் : எஃகுக் குழம்பில் குமிழி போக்கும் எந்திரக் கருவியினுள் செலுத்துவதற்காக, ஊதுலையில் மெல்லிரும்பினை உருண்டைகளாக மாற்றுதல்

ballistics : ஏவுகணைகள் : சுடு கருவிகளிலிருந்து அல்லது பீரங்கி களிலிருந்து செலுத்தப்படும் உந்து விசைப்படைக்கலங்கள்; அல்லது விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள்

ballistic missile early warning system : (மின்னி.) ஏவுகணை முன்னெச்சரிக்கைக் கருவி : எதிரிகள் கண்டம் விட்டுக்கண்டம் செல்லும் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்த விருப்பதைக் கண்டுபிடித்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கும் ஒரு மின்னணுவியல் சாதனம்

ballistic missile interceptor: (மின்.) ஏவுகணை இடைத்தடுப்பான் : பறந்துவரும் ஏவுகணையை இடைமறித்து அழிக்க கூடிய வெடிக்கவல்ல ராக்கெட் ஏவுகணை

ball mill : கோளகை அரைவை எங்திரம் : காய்ந்த பொருளை பெரும்பாலும் பீங்கானைத்தூளாக்குவதற்கான அல்லது கலவை செய்வதற்காகப் பயன்படும் நீள் உருளை வடிவான ஒர் அரைவை எந்திரம். இதில் பெரும்பாலும் அறைப்பதற்காக் கடினமான கூழாங்கற்கள் பயன்படுத்தப்படும். எனவே, இதனைக் கூழாங்கல், அரைவை எந்திரம் என்றும் கூறுவர்

ballonet: (வானூ.) காற்றறைப்பை : புகைக்கூண்டு அல்லது விண்கலத்திலுள்ள அறைபோன்ற ஒரு பகுதி. இதில் காற்றை அடைத்தும், இதிலிருந்து காற்றை வெளியேற்றியும் வாயுவின் அழுத்தத்தினை நிலைப்படுத்தி வரலாம்

baloon : (வானூ.) ஆவிக்கூண்டு : இது காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம். இதில் செலுத்தும் பொறியமைவு இராது

ballon framing : (க. க.) கூண்டுக் கட்டுமானம் : அடித்தளத்திலிருந்து கூரை வரையில் கண்டமாகக் கட்டப்படும் குமிழ் முகப்பு

துலாக்கட்டைகள், சாரப்படி மரப்பலன்கயின் ஆதாரத்துடனுங்கூடி குமிழ் முகப்புடன் தளர்வாக இணைக்க்ப்பட்டிருக்கும்

ballon tire : (தானி; எந்.) கூண்டுச் சூழ்பொதி : குறைந்த காற்றழுத்தங்களுக்காக வடிவமைககப்பட்ட பெரிய, நெகிழ் திறனுடைய கவரும், குறைந்த அழுத்தமும் இருப்பதால் எளிதில் சவாரி செய்ய முடிகிறது

balbpeen hammer : குண்டு நுனிச்சுத்தி : எந்திர இயக்கவல்லுநர்கள்