பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வகைச் சுத்தி. இதன் தலைப்பகுதியின் ஒரு முனை வட்டவடிவத்தின் அல்லது குண்டு வடிவத்தில் ஆணியால் பிணைப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். மறு முனையின் பரப்புத் தட்டையாக இருக்கும்

குண்டு துணி சுத்தி

ball race : (எந்.) ஒட்டப்பாட்டை : குண்டு தாங்கியில் குண்டு ஒடுவதற்காக உள்ள வரித்தடம்

ball reamer : (எந்.) (5sin(9# துளைச் சீர்மி : ஒரு குண்டு இணைப் பிற்காக உட்புழை அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் அரைக் கோள வடிவிலான புழை முக முடைய சீர்மி

ball stake : கூண்டு வடிவ முளை : வளைவான பொருள்களை வடிவமைப்பதற்கும், அவற்றில் வேலை செய்வதற்கும் பயன்படும் காளான் வடிவிலான முளை

கூண்டு முனை

ball tool : (தோல்.) குண்டு முனைக் கருவி : குண்டு முனையை உடைய ஒரு சிறிய நீளமான கருவி. தோல் பொருள்களில் புடைப்பு வடிவழைப்புகளை உண்டாக்குவதற்கு இது பயன்படுகிறது

balsa : (மர.) தக்கைமரம் : மேற்கிந்தியத் தீவுகளிலும், மத்திய அமெரிக்காவிலும் வளரும் ஒரு வகை மரம். இதன் கட்டமைப்பு ஒரளவுக்கு எலுமிச்சை மரத்தையும் நெட்டிலிங்க மரத்தையும் ஒத்திருக்கும். இது மிகவும் இலேசானது; அதேசமயம் வன்மை வாய்ந்தது. எனவே, இது விமானங்கள் செய்வதற்கு உகந்த மரமாகப் பயன்படுகிறது

balsam fir : (மர.) குங்கிலிய ஊசியிலை மரம் : இது நடுத்தரவ4. வளவுடையது; என்றும் பசுமையாக இருப்பது:12-15 மீட்டர் உய ரம் வள்ர்க் கூடியது. இதன் மரம் எளிதில் முறியக்கூடிய்து இது நெடு நாள் நீடித்திருக்காது. இது கிறிஸ்துமஸ் மரமாக மட்டுமே பெருமளவில் விற்பனையாகிறது. இதற்கு வாணிக மதிப்பு ஏதுமில்லை

balsams : (வேதி; குழை.) பொன் மெழுகு : விரைந்து ஆவியாஇற எண்ணெய்ப் பொருளுடன் கலந்து கிடைக்கும் பிசின்கள் அடங்கிய இயற்கையான பொன் மெழுகின் இயற்பியல் பண்புகளைக் தோண்ட பொருள்களையும் இது குறிக்கும்

baluster : (க.க.) கைப்பிடிச்சுவர்த் தூண் : ஒரு திறப்பான மாடிப்ப்டியில் கைப்பிடிச் சுவரினைத் தாங்கும் மரத்தினாலான சிறுதூண் அல்லது கம்பம்; சிறு துர்ண் வரிசைத் தொகுதியின் ஓர் அலகு. கைப்பிடிச் சுவர்த் தூணின் புறக் கோட்டச் சாய்வு

balustrade : (க.க.) தூண் வரிசை : மாடிக் கைப்பிடிச் சுவர் அல்லது மதிலின் சாய்வான மேல் முகடு ஏறி நிற்கின்ற சிறிய தூண்களின் அல்லது சதுரத் தூண்களின் வரிசைத் தொகுதி

bamboo : மூங்கில் : வெப்ப மண்டலங்களில் வளரும் மரம் போன்ற புல்வகை. அரைகலன்கள். பிரம்புகள், தூண்டிற் கோல்கள் முதலியவை செய்ய இது பயன்படுகிறது

banana oil : (மர. வே) வாழை எண்ணெய் : இது "அமில ஆசிட்டேட்" என்ற நச்சுப்பொருளாகும். இது வேதியியல் வடிவில் சிறிதளவு கிடைக்கிறது. இதன் மணம் காரணமாக இப்பெயர் பெற்றது. இது மரம், உலோகம் முதலியவற்