பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மீது பொருத்தப்பட்டுள்ள பல மின் விளக்குகளின் தொகுதி. ஒரு சுற்றில் இணைக்கப்படவிருக்கும் ஒரு மின்னாக்கி. மின் மின்னழுத்த அளவினைக் குறிக்க இது பயன்படுகிறது

bar : சலாகை : (உலோ.)

(1) அகலத்தைவிட நீளம் அதிகமாகவுள்ள ஒர் உலோகத் துண்டு

(2) அச்சுக்கலையில், அச்செழுத்துகளை பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டத்தின் குறுக்கே அதுபரவி விடாதவாறு தடுப்பதற்கு மையத்தில் வைக்கப்படும் உலோகத் துண்டு

bare faced tenon : (மர.வே.) மூடியில்லாப் பொருத்து முளை பிரம்புகள், தூண்டிற் கோல்கள் முதலியவை செய்ய இது பயன்படுகிறது

bar folder : (உலோ.) சலாகை மடிப்பான் : உலோகத் தகடுகளில் வேண்டிய கோணங்களில் மடிப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

barge board : (க. க.) அலங்கார மறைப்பு : மஞ்சடைப்புத் தூலங்களுக்கான அலங்கார மறைப்பு. 19ஆம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளில் இத்தகைய மறைப்பு பெரும்பாலும் அலங்காரத்திற்காகவே அமைக்கப்பட்டன

bar iron : (பட்.) சலாகை இரும்பு : அடித்து வடிப்பதிலும் பட்டறைகளிலும் பயன்படுத்தப்படும் தட்டையான செவ்வக வடிவமான இரும்புத் துண்டு

barite : (வேதி.) பாரைட்டு : (Ba SO4) : வெண்படிகங்களாகக் கிடைக்கும் ஒருவகைக் கனிமம். இது நுண்மணிகள் வடிவிலும் கிடைக்கிறது. இதன் கெட்டியான வடிவம் பளிங்குக்கல் போன்றிருக்கும்

barium : (வேதி.) பெரியம் : (Ba); இது வெண்மையான உலோகத் தனிமம். இது சற்றே ஒளிரக் கூடியது; இது ஒரளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது. பேரியம் உப்புகளிலும், உலோகக் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

barium titanate : (மின்.) பேரியம் டைட்டானேட் : மின் பாய்வு இயல் மாற்றியில் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுப் பொருள்

bark tannage : (தோல்.) மரப்பட்டைத்தோல் பதனிடுதல் : கருவாலி போன்ற மரவகைகளின் பட்டையைப் பயன்படுத்தித் தோலினைப் பதனிடுதல்

bark : (தாவர.) மரப்பட்டை : மரத்திற்குக் காப்பாக இயற்கையாக அமைந்துள்ள பட்டை

barley twist : சுருள் வட்டத்திருக்கு : சுருள் வட்டமான சுழற்சி

bar magnat : (மின்.) சலக்கைக்காந்தம் : (1) வளையாத நிரந்தரக் காந்தம் (2) சலாகை வடிவில் செய்யப்பட்ட ஒரு நிரந்தரக் காந்தம்

barograph : (வானு.) அழுத்தவரைவி : காற்றழுத்தத்தைதானாகவே பதிவு செய்யக்கூடிய ஒரு காற்றழுத்த மானி

barometer : காற்றழுத்த மானி : வாயுமண்டலத்தில் காற்றழுத்தத்தினைக் குறித்துக் காட்டுவதற்கான ஒரு கருவி. வானிலை முன்னறிவதற்கும், கடல் மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிவதற்கும் இக்கருவி பயன்படுகிறது

baroque : விசித்திர பாணி : 17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் கட்டிடக் கலையில் மனம்போன போக்கில் கையாளப்பட்ட விசித்திரமான கலைப் பாணி