பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

barrel vault : (க.க.) பீப்பாய் வடிவக் கவிகை மாடம் : உட்குழி வான நீள் வடிவமுடைய கவான்கள் கொண்ட வில் வளைவான முகடு

bar stock : (உலோ.) உலோகச் சலாகை : ஒழுங்கான வடிவளவுகளிலும் நீளங்களிலும் உள்ள, செய்து உருவாக்கிய உலோகச் சலாகைகள்

basal metabolism: (உயி.) அடிப்படை உயிரியல் மாறுபாடு : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச் சத்து, உயிர்ச் சத்தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் அடிப்படையான உயிர்ப் பொருள் மாறுபாடு. ஒருவர் குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் சூழ்நிலைகளிலும் முழு ஒய்வில் இருக்கும்போது அவரது உடலில் ஆக்சிஜன் பயன்படுத்தப்படும் அளவு, கார்பன்டையாக்சைடு உற்பத்தியாகும் அளவு ஆகியவற்றைக் கொண்டு அவருடைய அடிப்படை உயிரியல் மாறுபாட்டு வீதம் கணக்கிடப்படுகிறது

basalt : (மண்.) தீக்கல் : எரிமலைப் பாறையினாலான, திண்னிய பசுமை நிறமுடைய ஒரு வகைப் பாறை. இது சாலைப் படுக்கைகள், சாலை-இருப்புப் பாதையின் உடைகல்லான அடிப் பரப்புகள் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது

bascule bridge : இயங்கு பாலம் : எடைக் கட்டியினால் உயர்த்தவும் தாழத்தவும் படுகிற ஒருவகைப் பாலம்

இயங்கு பாலம்

base : (வேதி.) உப்பு மூலம் : (1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள்

(2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொருள்

(3) அமிலங்களுடன் இணைந்து அவற்றின் அமிலத் தன்மைகளை இழந்திடச் செய்யும் திறனுள்ள ஒரு கூட்டுப் பொருள்

(4) அடித்தளம் : அறைகலன் வகையில் அவற்றின் அடிப்பகுதி

(5) பீட அடிக்கட்டை : இறைச்சிக் கொட்டிலில் பீடமாகப் பயன்படும் மர அடிக்கட்டை

(6) விதானத் தொங்கல் : படுக்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள இருக்கை தட்டுமுட்டுப் பொதிவுப் பட்டாடை

base boards (க.க.) அடிப்பலகை : சாந்து பூசிய சுவர் தரையைத் தொடுமிடத்தை மறைக்கும் ஒரப்பலகை

base circle : (பல்.) அடித்தள வட்டம் : பல்லிணைப்பு இழுத்தலில் உள்முகமாகத் திரும்பிய பல்லானது எந்த வட்டத்தின் மீது அமைந்துள்ளதோ அந்த வட்டம்

base course : (க.க.) அடித்தள வரிசை : கட்டிடத்தின் பிற பகுதிகளைத் தாங்கி நிற்கக்கூடிய முதல் தள வரிசை அல்லது அடித்தள வரிசை

base line : (க.க.) அடிமூவரை : நில அளவை வகையில் முக்கோண நில அளவைக்கு அடிப்படையான அடிமூலவரை

basement : (க.க.) நிலவறை : ஒரு கட்டிடத்தின் பிரதான தளத்திற்கு அடியில் அமைந்துள்ள அடித்தளப் பகுதி