பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

basemetal : (உலோ.) இழிந்த உலோகங்கள் : விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்கள்

base molding : அடித்தளச் சித்திரவேலைப்பாடு : சுவர், தூண் அல்லது அடிப்பீடத்தின் அடித்தளத்திற்கு அடுத்து மேலுள்ள சித்திர வேலைப்பாடு

base of a column : (க.க.) தூணின் அடிக்கட்டு : தூணின் முனை முகட்டுக்கும் அடிப்பீடத்திற்கும் இடையிலுள்ள பகுதி

base plate or bed plate : (எந்.) அடியடுக்குத் தகடு : ஒர் எந்திரத்திற்கான அடித்தளத் தகடு அல்லது ஆதாரம்

base trim : (க.க.) அடிபீடம் : அடிப்பலகையில் இருப்பதுபோல், ஒரு வேலையைச் செய்வதற்கான அடிக்கட்டையாகப் பயன்படக் கூடிய ஒரு பலகை அல்லது பீடம்

basic load : (வானூ) அடிப்படைப் பளு : விமானம் நிலையில் நிற்கும்போது அதிலுள்ள பளு. இந்த அடிப்படைப் பளு, தகை வினைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவை

basic slag: (உலோ.) காரச்சிட்டம் : எஃகு தயாரிக்கும்போது ஊதுலைகளில்படியும் சுண்ணாம்பு, பாஸ்வரம் கலந்தகூட்டுப்பொருள். இது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த உரமாகப் பயன்படுகிறது

basic steel : (உலோ.) அடிப்படை எஃகு : இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "திறந்த உலை முறை" என்னும் ஆழமற்ற மூட்டு அனல் உலை முறை மூலமும் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் பெஸ்ஸ்மர் முறைக்குப் பதிலாகத் திறந்த உலை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது

basic weight : (அச்சு.) அடிப்படை எடை : குறிப்பிட்ட வடிவளவுள்ள குறிப்பிட்ட தாள் எதற்காகவுமான குறிப்பிட்ட தர அளவு எடை, இது ஒரு ரீமுக்கு இத்தனை கிலோ கிராம் என்று குறிப்பிடப்படும்

basil : (எந்.) சாய்கோண முனை : துரப்பணத்தின் அல்லது உளியின் சாய்கோண முனை

basket : (வானூ.) கூண்டு : ஆவிக் கூண்டின் அடியில் பயணிகளையும் அடிச்சுமையினையும் ஏற்றிச் செல்வதற்காகத் தொங்கவிடப்பட்டுள்ள ஊர்தி

bas-relief : புடைப்புச் செதுக்கோவியம் : பின்னணி அரை அகழ் வான புடைப்புருச் செதுக்கோவியம்

bass boost : (மின்.) உகைப்புமின் சுற்றுவழி : குறைந்த அலை வெண் ஒலியை செறிவுறுத்தி அதிகரிப்பதற்குப் பயன்படும் ஒலி மின்சுற்றுவழி

bass compensation : (மின்.) ஒலிச் சரியீடு : தாழ்ந்த அலைவெண் ஒலியைக் குறைந்த தொனியிலும் உயர்ந்த அலைவெண் ஒலியினை அதே தொனியிலும் கேட்பதற்கு மனிதரின் காது இயலாதிருப்பதைச் சரியீடு செய்வதற்கான் ஒரு மின்னணுவியல் மின் சுற்றுவழி