பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

ளை முதல் சிவப்பு வண்ணத்தில் மண்ணிலிருந்து தோண்டியெடுக் கப்படுகிறது. அலுமினிய உலோகத்திற்கு இதுவே முதன்மையான ஆதாரம். இது அலுமினியம், அலுமினா தயாரிக்கவும். அதிவெப்பத்திற்குச் சூடாக்கப்படும் ஊதுவைகளின் உள் பூச்சுக்காகவும் பயன்படுகிறது

bay : (வானூ.) இடைவெளி :

(1)மாணத்தின் கட்டுமானச் சட்டத்தின் ஆதாரத் கட்டுமானத்தின் முகப்புப்ப்குதியின் ஒரு பகுதி. இது அண்டை அறைத் தடுப்புகளுக்கு அல்லது அண்டை விட்டக்காழ்வுகளுக்கு இடையில் இருக்கும்

(2) கட்டிடக் கலையில் இரு தூண்களுக்கு அல்லது மதில்கலுக்கு இடையிலான இடைவெளி

bayonet socket : (மின்.) ஈட்டி வடிவக் குதைகுழி : பக்கங்களில் நீளவாக்கில் இரு வடிவளவுத் தடங்கள் அடியில் செங்கோணத் திருப்ப முடையனவாக இருக்கும். இதனால், இரு செருகிகள் கொண்ட ஒரு விளக்கினை இந்தத் தடங்களுக்குள் செலுத்தி அதற்குச் சற்றுத் திருப்பத்தைக் கொடுக்கலாம்

baywood : புன்னைமரம் : சீமை நூக்கு போன்ற, ஆனால் அதைவிட மிகவும் இலேசான ஒரு மென் மரம். இது புனை வடிவங்கள் செய்யப் பயன்படுகிறது. இதனை 'பிலிப்பைன் நூக்கு" என்றும் அழைப்பர்

bazooka : உந்துகலம் : ராக்கெட்டுகளை விண்வெளியில் உந்தித்தள்ளுவதற்கான ஒரு துப்பாக்கி. இது இரு முனைகளிலும் திறந்திருக்கும். தோளில் வைத்துக் கொண்டு இதனைப் பயன்படுத்துவர்

beaching gear : (வானூ.) உருள்பல்லிணை : ஒரு கடலூர்தியின் உடற்பகுதியுடன் இணைந்த சக்கரங்களின் அமைவு. இது அந்த ஊர்தியைக் கரையிலிருத்துவதற்கு அனுமதிக்கும்

beacon (க.க.) : கலங்கரை விளக்கம் : கப்பல் அல்லது விமானங்களுக்கு ஒளி விளக்கு அல்லது ஒளிவிளக்குகளின் தொகுதி அல்லது வேறு வழி காட்டு சாதனம்

bead : (க.க.) : குமிழ் மணி :

(1) கட்டிடக் கலையில் குமிழ் மணி வரிசை உருவ அழகு வேலைப்பாடு

(2) சக்கரப் புறத்தோட்டின் குமிழ் புடைப்பு

beading : (உலோ.) மணியுரு அமைவு : அலங்கார வேலைப்பாட்டிற்காக மணியுரு அமைத்தல்

beading machine : (உலோ.) மணியுரு அமைப்புப் பொறி : உலோகத் தகடுகளில் பல்வேறு வடிவங்களிலும் வடிவளவுகளிலும் மணியுரு அமைப்பதற்கு உதவும் பொறியமைவு. இது பாத்திரங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது

bead plane : (மர. வே.) மணியுருதளம் : மணியுருக்களை அமைப்பதற்குப் பயன்படும் தனிவகைத் தளம்

beaker : (வேதி.) மூக்குக் குவளை : ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் மூக்குடைய ஊற்று கலம். இது பெரும்பாலும் கண்ணாடியாலானது

beakhead : (க.க.) கொடு மூக்கு முகடு : கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கமாகிய எழுதகத்தின் மிகத்தாழ்ந்த உறுப்பில் பயன்படுத்தப்படும் சித்திர வேலைப்பாடமைந்த விளிம்பு