பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84


beakhorn stake : (உலோ.) : கொடுமூக்குக் கொம்பு வடிவமுளைஒரு முனை உருண்டையான நுனி நோக்கிச் சிறுத்துச் செல்வதாகவும் மறு நுனி நீளமாகவும், செவ்வக வடிவிலும் அமைந் ததாகவும் உள்ள ஒரு முளை. இதனைச் சதுரமானதும், கூம்பு வடிவுடையதுமான பொருள்களை வளைத்து வடிவுருக்கள் உண்டாக்கப் பயன்படுகிறது


beam . (வானூ.) (1) வானொலித் திசைகாட்டி : விமான மீகாமத்தில் திசைகாட்டிச் செல்லக்கூடிய ஒரு வானொலிச் சாதனம்

(2) ஓர் இறகின் பிரதான குத்துக் கோல்.

(3) ஒரு விமானத்தின் பக்கத்தின் உருவ்ரைத் தோற்றம்.

(4) உத்தரம்|துாலம்.

beam anchor: (க.க.) தூல ஆதரம் : தளத் துலங்களைச் சுவர்களுடன் பிணைப்பதற்குப் பயன்படும் ஒர் ஆதாரம்

beam ceiling : (க.க.) தூல முகடு : இதில் தூலங்கள் அவை போலியாயினும் உண்மையான வையாயினும், வழக்கமாகக் கிடை மட்டத்தில் பார்வைக்குப் புலப் படுமாறு அமைக்கப்பட்டிருக்கும்

beam compass : (பட்.) தூலத் திசைக்காட்டி : முனைகளைத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்த ஒரு பெரிய திசைகாட்டி. இது ஒரு நூலகத்துடன் அல்லது ஒரு மர அல்லது உலோகச் சலாகையுடன் இணைக் கப்பட்டிருக்கும். பெரிய வட்டங்களை அல்லது வளைவுகளை வரைந்து காட்டுவதற்கான அறைகளிலும், பட்டறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது

beam drill : (எந்.) தூலத் தூரப்பணம் : இது ஆரைக்கால் துரப் பணம் போன்றது. இதில் இரு முனைகளிலுமுள்ள புயங்கள், இழைப்புப் புளியின் குறுக்குக் கைப்பிடி போன்று ஆதாரம் கொண்டிருக்கும்

beam pattern : (தானி; எந்;) தூலத் தோரணி : முகப்பு விளக்குகளின் ஒளி படரும் பரப்பின் வடிவளவு அல்லது பரப்பளவு

beam power tube : (மின்.) மின் கதிர்க் குழல் : எதிர்மின் முனையிலிருந்து செறிவுறுத்திய மின் கதிர்க் கற்றையாகப் பாயும் எலெக்ட்ரான் கள் மின்கம்பி வலை வழியாகத் தகட்டுக்குச் செல்லும் வ்கையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழல்

bearer : (அச்சு.) தாங்கு தகடு : ஒரு தகட்டின் அச்சிடும் பரப்புக்குள்ளே அல்லது அதனைச் சுற்றி உள்ள மிகை உலோகம்; கையினால் மை தடவி, அச்சுப் பார்வைப் படி எடுக்கும்போது ஒரு தகட்டின் பக்கததில் வைக்கப்படும் ஒர் உலோகத் தகடு

bearing : (க.க.) தாங்குத் தளம் : (1) ஆதாரங்களின் மீது நிற்கும் தூலம், தாங்கணைவு முதலியவற்றின் பகுதி. (2) எந்திரவியலில் சுழலும் தண் டுக்கான ஆதாரக் கட்டு அல்லது ஊர்தி