பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அடைத்து, தோரணியான நிலையில் நிறுத்துவதற்கான ஒரு வார்ப்படச் செய்முறை. இதில் தோரணியைச் சுற்றி மணல் உறுதியாகத் திணிந்து, இறுகிக் கொள்ளும்

bedford limestone : பெட்ஃ சுண்ணாம்புக்கல் : அமெரிக்காவில் கிடைக்கும் மிக நேர்த்தியான சுண்ணாம்புக்கல் வகை. இந்தியானா மாநிலத்திலுள்ள பெட்ஃபோர்டு என்னுமிடத்திலிருந்து இது மிகுதியாகக் கப்பலேற்றப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது

bed moulding : (க.க.) அடையடுக்கு வார்ப்படம் : புறந்துருத்தி மேலே நீட்டிக்கொண்டிருக்கிற பகுதியின் அடியில் இறுதி நிலையாகப் பயன்படுத்தப்படும் வார்ப் படம். அதாவது, இறவாரங்களின் இணைப்பிலும், சுவருக்கு வெளிப் புறத்திலும் பயன்படுத்தப்படும் வார்ப்படம்

bed plate : (க.க.) படுகைத் தகடு

(1) ஏதேனும் கட்டுமானப்பகுதிக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப் படும் ஒர் உலோகத் தகடு

(2) ஒர் எந்திரத்தின் அடித்தளமாக பயன்படுத்தப்படும் ஓர் உலோகத் தகடு

bedrock : (க.க.) அடிநிலப் பாறை : பூமியின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை

beech (மர.) (fagus) : புங்கமரம் : இது ஒரு பெரிய மரம். இது சில சமயம் 30 மீட்டர் உயரம்வரை வளரும். இதன் குறுக்கு விட்டம் 60 செ.மீ முதல் 90 செ.மீ. வரை இருக்கும். இதன் மரம் கடினமானது; வலுவானது; முரடானது; ஆனால், நீடித்து உழைக்கக்கூடியதன்று. விறகுக்கு ஏற்றது. இதற்கு வாணிகப் பயன்பாடு ஏதுமில்லை

bees wax : தேன்மெழுகு : தேன் கூட்டிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை மெழுகு. இதுகலை வேலைப் பாடுகளில் பல வகைகளில் பயன்படுகிறது. உலோகத் தோரணி மணலிலிருந்து விடுவிப்பதற்கான உள்பூச்சாகவும் பயன்படுகிறது

beige : (வண்.) கம்பளித் துணி : சலவை செய்யப்படாமலும், சாயமிடப்படாமலும் உள்ள கம்பளித் துணி

belfry : (க.க.) மணிக் கூண்டு : திருக்கோயில் கோபுரத்தில் மணிகளைத் தொங்கவிடுவதற்கான இடம்

bel1 : (மின்.) மின் மணி : மின் காந்தம், மணியின் நா, சேமக்கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இயக்கப்படும் ஒரு மின் சைகைச் சாதனம்

Beliminator : (மின்.) 'B' மின்னழுத்தக் கருவி : மின்கல வானொலிப்பெட்டி இயங்குவதற்காக 'B' மின்கலத்திற்குப் பதிலாக தேவையான 'B' மின்னழுத்தம் உண்டாக்கக்கூடிய ஒரு சாதனம்

Bell, Alexander Graham : பெல், அலக்சாண்டர் கிரகாம் (1847-1922) : தொலைபேசியைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி. இவர், "குரலைக் கம்பிகள் மூலம் கொண்டு செல்லலாம்" என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்மித்சோனிய ஆய்வுக் கூடத்தின் ஆட்சியாளராகவும், தேசியப் புவியியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர்

bell-and-spigot joint : (கம்.) மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு : வார்ப்பிரும்புக் குழாயின் ஒவ்வொரு பகுதியும் ஒருமுனை பெரிய அல்லது மணிவாய் வடிவிலும், இன்னொரு முனை ஆப்பு வடிவிலும், அமைந்திருக்கும். ஒரு பகுதியின் ஆப்பு முனை, அடுத்தப்