பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

பகுதியின் மணிவாய் முனையுடன் பொருந்த இணைந்து கொள்ளும்

bell crank : மணி வளைவு : 90° கோணத்தில் சந்திக்கும் இரு புயங்களைக் கொண்ட ஒரு நெம்புகோல் அல்லது வளைவு

மணி வளைவு

bell-glass : கவிகை : செடிகளை மூடிவைப்பதற்கான மணி வடிவக் கண்ணாடிக்கலம்

bell metal : வெண்கலம் : செம்பும் வெள்ளியமும் கலந்த மணி செய்வதற்கான கடினமான ஆனால் எளிதில் உடையக்கூடிய ஒர் உலோகக் கலவை

bell mouthed : மணிவாய் : ஒரு முனையில்மணியின் வாய் போன்ற திறப்புடையது

bell or hub : (கம்.) மணி அல்லதுலது குடம் : ஒரு குழாயின் முனையை அதே விட்டமுடைய மற்றொரு குழாயுடன் இணைத்துப் பொருத்துவதற்கு, போதிய அளவுக்குக் குடம் போல் பெரிதாகவுள்ள பகுதி

bellows : (வார்.) உலைத் துருத்தி :

(1) காற்றையும் நெகிழ் திறனுள்ள பக்கங்களையும் உடைய ஒரு சாதனம். இது காற்றோட்டத்தை உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது

(2) வார்ப்படத்தில் தோரணிகள் முதலியவற்றின் முகப்புகளிலிருந்து மணலை ஊதி அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் கையினால் இயக்கப்படும் சிறு உலைத்துருத்தி

உலைத் துருத்தி

bells palsy : (நோயி.) முகமுடக்கு வாதம் : முகத்தின் ஒரு பக்கத்துத் தசை செயலற்றுப் போதல்

bell-ringing transformer : (மின்.) மணியடிப்பு - மின்மாற்றி : சாதாரண வீட்டு மின்சுற்றில் மணியடிப்பதற்காக மின்னழுத்தத்தைக் குறைக்கின்ற ஒரு சிறிய மின்மாற்றி

bell switch : (மின்.) மணி மின்விசை : ஒரு மின்சுற்றிலிருந்து மணியைத் துண்டிப்பதற்கும் அல்லது அதில் மணியை இணைப்பதற்கும் பயன்படும் ஒரு மின்விசை

belly : புடைப்பு :

(1) வார் பூட்டிக் கட்டுதல், கயிறு கட்டி இழுத்தல் மூலம் விளைவிக்கப்பட்ட புடைப்பான ஒரு பரப்பு

(2) அச்சுருவின் ஒரு வரியின் மையத்தில் படிப்படியாக அமைந்த பள்ளம்

belt : (க.க.) தளவரிசை :

(1) தளத்திலிருந்து தளம் மீது படிவிக்கப்ப்டும் ஒரு எறிவுப் படிவத்தின் இணைப்புக் கட்டு அல்லது வெவ்வேறு வகைச் செங்கலினால் கட்டப்பட்ட ஒரு தளவரிசை

(2) வார்ப்பட்டை : எந்திர உறுப்பு இணைத்தியக்கும் தோல் பட்டை வார்

belt clamp : (எந்.) வார்ப்பட்டைப் பற்றுக்கட்டை : ஒரு வார்ப்பட்டையின் இருமுனைகளையும் பிணைக்கும்போது இருமுனைகளையும் பிடித்துக் கொள்வதற்கான ஒரு சாதனம்

belt conveyor : வார்ப்பட்டை ஊர்தி : தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும் அகலமான வார்ப்பட்டை