பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

belt dressing : வார்ப்பட்டை மெருகு : எந்திர வார்ப்பட்டையில் பிடி சறுக்கி விடாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஒன்று

belt hook : (பட்.) வாரப்பட்டைக் கொக்கி : வார்ப்பட்டைகளைக் கையால் இயக்கி இடம் பெயரச் செய்வதற்கான ஒரு சாதனம். இது ஒருநீளமான கொக்கியுடன் நீண்ட கோலினை அல்லது கழியினைக் கொண்டிருக்கும்

belt laeing : (எந்.) வார்ப்பட்டை இழைவார் : ஒரு வார்ப்பட்டையின் முனைகளைக் கோத்திறுக்குவதற்குப் பயன்படும் ஒரு குறுகலான தோல் வார்ப்பட்டை. கம்பிக் கொக்கிகள் போன்ற வேறுவகைக் கட்டுவார்களும் தவறாக வார்ப்பட்டை இழைவார் என அழைக்கப்படுகின்றன

belt sandar : (மர.வே.) வார்ப்பட்டை மெருகேற்றி : மரத்தில் மெருகு வேலைப்பாடு செய்வதற்காக ஒரு பட்டைச் சீலை வார்ப்பட்டையினையுடைய, மின்னோடியால் இயங்கக்கூடிய ஒரு பொறியமைவு

belt shifter : (பட்.) வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி : பெயர்ப்பு விரல்கள் அல்லது புயங்கள் இணைக்கப்பட்டுள்ள 120 செ.மீ அல்லது 5 அடி நீளமுடைய ஒரு தட்டையான மரத்துண்டு. இறுக்கமான கப்பிகளிலிருந்து தளர்வான கப்பிகளுக்கு ஒரு வார்ப்பட்டையினை மாற்றுவதற்குப் பயன்படுகிறது

bench : (பட்.) விசிப் பலகை : தச்சர் முதலியோர் வேலை செய்வதற்காக பட்டறைப் பிடிப்புக் குறடு போன்ற கருவிகள் பொருத்தப்பட்ட மரத்தினாலான வலுவான ஒரு நீண்ட பலகை

bench assembly : (பட்.) விசிப்பலகை இணைப்பு : ஒரு விசிப்ப லகையின் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை வைத்து ஒன்றாகப் பொருத்தி இணைக்கும் முறை. இவ்வாறு இணைக்கும் பணியில், அராவுதல், மெருகிடுதல், துளையிடுதல், பற்ற வைத்தல், துரப்பணமிடுதல், திருகாணிகள் முதலியவற்றால் பிணைத்தல் ஆகியவை அடங்கும்

bench dog : (பட்.) விசிப்பலகை வளையிருப்பாணி : விசிப்பலகையின் விளிம்பு அருகேயுள்ள தடத்தில் அல்லது துளையில் செருகப்பட்டுள்ள மரத்தாலான அல்லது உலோகத்தாலான ஒருமுளை. இது பிடி நழுவி விடாமல் தடுப்புதற்குப் பயன்படுகிறது. இது விசிப்பலகை நிறுத்தியிலிருந்து வேறுபட்டது

bench hook : (மர. வே.) விசிப்பலகைக் கொக்கி : விசிப்பலகையில் சில வேலைகளைச் செய்யும் போது, விசிப்பலகையின் மேற்பகுதிக்குச் சேதமேற்படாத வகையில் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள முனைகளுடன் கூடிய ஒரு தட்டையான மரத்துண்டு

bench lathe : (எந்.) விசிப்பலகை கடைவான் : 'இலேசான வேலைகளைச் செய்வதற்காக ஒரு விசிப்பலகையின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய கடைவான்

bench plane : விசிப் பலகை இழைப்புழி : சமதளப் பரப்புகளை இழைத்து வழவழப்பாக்குவதற் ஒரு விசிப்பல்கையின் மீது பொருத்தப்பட்டுள்ள இழைப்புழி

benzene ring : சாம்பிராணி எண்ணெய் வளையம் : நிலக்கரிக் கீலிலிருந்து எடுக்கப்படும் நறுமண