பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89

நீர்க்கரிமப் பொருளாகிய சாம்பிராணி எண்ணெயின் (பென்சீன்) மூலக்கூற்றில் 6 கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு வளையம் அடங்கியிருக்கும். அந்த 6 கார்பன் அணுக்களுடனும் ஒரு ஹைட்ரஜன் அணு இணைந்திருக்கும்

bench stop : (மர.வே.) : விசிப் பலகை நிறுத்தி : ஒரு விசிப்பலகையின் மேற்பகுதியில் அதன் விளிம்பின் அரு பொருத்தப்பட்டுள்ள வெட்டுத் தடங்கொண்ட, தக்கவாறு அமைத்துக் கொள்ளக் விசைப் கூடிய ஒர் உலோகச் பல சாதனம். ஒரு பொருளை திறத்தி சார்த்தி இழைத்து வழவழப்பாக்குவர்

விசைப் பலகை நிறுத்தி

bench vise : (எந்.) விசிப்பலகைக் குறடு : எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் சாதாரணப் பட்டறைப் பிடிப்புக் குறடு. இது சமதளமாகவோ, சுழல் மூட்டாகத் திருகுடையதாகவோ இருக்கும்

bench work : (மர.வே.) விசிப் பலகை வேலை : இது விசிப்பலகையில் பிடிப்புக் குறட்டால் பிடித்து நிறுத்திச் செய்யப்படும் வேலை. இது எந்திரத்தால் செய்யப்படும் வேலையிலிருந்து வேறுபட்டது

bend : பதனத்தோல் : மிகக்சிறந்த தரமுடைய கால்டித் தோலினைக் கொண்ட விலங்குத் தோலின் பிற் பகுதி அல்லது பதனிட்ட தோல்

Ben Day Process : (அச்சு.) பென் டே செய்முறை : பென் டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செய்முறை. இதனை ஒளிச் செதுக்கு வேலைப்பாடு செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பசைப் படலங்களிலிலிருந்து உலோகத் தகடுகளுக்கு வடிவமைப்பை மாற்றி, அதன் பின் செதுக்குவேலை செய்யப்படுகிறது

bending moment : (பொறி.) வளைவு நெம்புதிறன் : இது பளு ஏற்றிய ஒரு தூலத்தின் ஒரு பகுதியின் வளைவு நெம்புதிறன் என்பது தூலத்தின் எடை உட்பட அதில் ஏற்றப்பட்டுள்ள பாரங்கள் அனைத்தின் கூட்டுத்தொகையும், அந்தப் பகுதியின் எந்த ஒரு புள்ளியையும் பொறுத்து அப்பகுதியின் இடப்புறத்தில் அல்லது வலப்புறத்தில் எதிர்வினைகளும் ஆகும்

bending pin or iron : (கம்.) வளைக்கும் ஊசி அல்லது இரும்பு : ஈயக் குழாய்களை நிமிர்த்துவதற்கு அல்லது விரிவாக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவி

bend test : (பொறி.) வளைவுச் சோதனை : ஒர் உலோகத் தண்டினை 90 வரை வளைத்து அல்லது ஒரு வளைவு ஊசியில் வளைத்து அது எந்த அளவுக்கு முறியக்கூடியது என்பதை சோதனை செய்தல்

bent : (பொறி.) வளைவு : ஒர் எஃகுச் சட்டகக் கட்டிடத்தின் ஒரு பகுதி. ஒரு சாரக்கட்டின் ஒரு தூண் வரிசைகளின் மீது நிற்கும் தூலம் அல்லது தூலக்கட்டை

bent gouge : (மர. வே.) வளைவு அலகு உளி : தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய நகவுளி

bent lever : (தானி; பொறி.) வளைவு நெம்புகோல் : உள்ளேயே உட்சாய்வுடைய ஒரு நெம்புகோல்

benzene : (வேதி.) சாம்பிராணி எண்ணெய் : நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்த் கரிமப் பொருள். இது கார்ப்பாலிக் அமி