பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

லம், அனிலின் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இது 'பென்சைன்’ எனப்படும் கரிநீர்மக் கலவையிலிருந்து வேறுபட்டது

benzine : (வேதி.) கரி நீர்மக் கலவை பென்சைன் : நில எண்ணெயிலிருந்து பெறப்படுவதும் கொழுப்புக் கறையை நீக்குவதற்குப் பயன்படுவதுமான கரிநீர்மக் கலவை. இது கரைப்பானாகப் பயன்படுகிறது

benzol : (வேதி.) பென்சால் : (C6H6) விசை வண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம் பிராணி எண்ணெய் வகை. இது நிறமற்ற கரைப்பான். இது வண்ணங்களை நீக்குவதற்குப் பயன்படுகிறது

beri beri : (நோயி.) தவிட்டான் நோய் : ஊட்டத்சத்துக் குறைவு காரணமாக, மூளை உட்பட உடலின் அனைத்து உறுப்புகளிலு முள்ள நரம்புகளை வீங்கச் செய்யும் ஒருவகை நோய். அரிசியைத் தீட்டுவதால் அதிலுள்ள 'பி' வைட்டமின் நீங்கி விடுகிறது. அவ்வாறு 'பி' வைட்டமின் நீங்கிய அரிசியை உண்பதால் போதிய 'பி' வைட்டமின் இல்லாமல் இந்நோய் உண்டாகிறது

beryllium : (உலோ.) பெரிலியம் : இது மிகவும் இலேசான, ஆனால் மிகக் கடினமான உலோகங்களில் ஒன்று. இது கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகை. இது அலுமினியத்துடன் எளிதாகக் கலந்து உலோகக் கலவையாகக் கூடியது

Bessemer steel : (உலோ) பேஸ்ஸமர் எஃகு : பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு. இது பெஸ்ஸமர் மாற்றுக் கலத்தில் தேனிரும்பிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது

Bessamer process : (உலோ.) பெஸ்ஸமர் முறை : சர் ஹென்றி பெஸ்ஸமர் என்பவர் எஃகு செய்வதற்குக் கண்டுபிடித்த செய்முறை. இதில், காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பின் ஊடாகக் காற்றோட்ட கீற்றுகளைப் பாய விட்டு, அதிலுள்ள மாசுப்பொருள்களை நீக்கி எஃகு தயாரிக்கப்படுகிறது

beta : (மின்.) பீட்டா : கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து. இது ஒரு மின்மப் பெருக்கியுடன் (டிரான்சிஸ்டர்) இணைந்துள்ள ஒரு பொது உமிழ்வியின் மின்னோட்ட ஈட்டத்தினைக் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது

beta rays : (இயற்.) பீட்டாக் கதிர்கள் : கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுடைய எதிர் மின்மங்களின் வரிசை

beta particle : (வேதி.) கதிரியக்கத்துகள் : பல கதிரியக்கப் பொருள்களினால் வெளிப்படுத்தப்படும் நேர் மின்னாற்றலோ, எதிர் மின்னாற்றலோ உடைய ஒர் எலெக்ட்ரான்

beta ray : (வேதி.) கதிரியக்கப் பொருள் : கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுவுடைய எதிர்மின்மங்களின் மூன்று வகைகளில் ஒன்று

beta-tron : (மின்.) எதிர் மின்ம ஆக்கக் கருவி : விசைவேக எதிர் மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிகையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி

beta-transformation : பீட்டா-உருகிலைமாற்றம் : ஒரு தனிமத்தை ஒர் அணு உலையில் இட்டு அதனுடன் ஒரு நியூட்ரானைச் சேர்த்தால், அந்தத் தனிமம் கதிரியக்கம்