பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கள் சிம்புகளின்றியும், நிறம் மாறாமலும் இருக்க வேண்டிய அவசியமில்லாதபோது, அவற்றைச் செய்வதற்கான ஒரு முறை

black bean : (மர.) கருங்தேக்கு : தேக்கு மரத்தைப் போன்றே வெட்டு மரம் தரக்கூடிய ஒர் ஆஸ்திரேலிய மரவகை. நேர்த்தியான உட்புற ஆலங்காரத்திற்கு இது பெருமளவில் பயன்படுகிறது

black birch : கரும் பூர்ச்ச மரம் : இது 15-18 மீ. வரை வளரக் கூடியது. இதன் விட்டம் 30-90 செ.மீ. இருக்கும். இதன் வெட்டுமரம் கடினமானது, வலுவானது. சீமை நூக்கு மரத்திற்குப்_பதிலாக உட்பகுதி அலங்காரத்திற்கும் அறைகலன்கள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது

black body : கரும்பொருள் : தன்மீது விழும் வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருள். இதனைச் சூடாக்கும் போது இது அந்த வெப்ப நிலையில் மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது

black box : (வானூ.) கறுப்புப் பெட்டி : விமானத்தின் இயக்கம் தொடர்பான சமிக்கைகளையும் உரையாடல்களையும் பதிவு செய்து கொள்ளும் ஒர் அடையாளப் பெட்டி

black copper : கருஞ்செம்பு : 75% செம்பு அடங்கியுள்ள ஒருவகை உலோகம். தரங்குறைந்த செம்பினை மீண்டும் உருக்கி இதனைப் பெறலாம்

blackdamp : (வேதி.) கரும் நச்சாவி : சுரங்கங்களில் காணப்படும் கார்பன்டையாக்சைடு என்ற நச்சாவியின் பெயர் (பார்க்க: சுரங்க நச்சாவி அல்லது சுரங்க நச்சு வாயு.)

black gum (மர.) கரும்பிசின் மரம் : இதனைப் புளிப்புப் பிசின் மரம் என்றும் கூறுவர். இது நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கடினமானத்ன்று; ஆனால், சொர சொரப்பானதாகவும், எளிதில் பிளக்க முடியாததாகவும் இருக்கும். சமையலறைப் பொருட்கள் மரச்சீவல் கூடைகள், அழிப்பெட்டிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது

blacking : கருமெருகிடுதல் : ஒரு வார்ப்படத்தின் மேற்பரப்பில் தூவப்படும் மரக்கரி அல்லது நிலக்கரி அல்லது கல்கரியின் தூள். இது மணல் தீய்ந்துவிடாமல் தடுக்கிறது

black lead : கருவங்கம் : வார்ப்பிரும்புக் குளிர்பதன வார்ப்பட முகப்புகளிலும், வண்ணப் பூச்சுத் தோரணிகளிலும் பயன்படுகிறது

black letter : (அச்சு.) கரும் அச்செழுத்துரு : ஜெர்மன் எழுத்துப் போன்ற பழைய ஆங்கில அச்சு எழுத்து வடிவம்

blacker than black (மின்.) கருமையினும் கருமை : தொலைக் காட்சியில் உரிய கருமை அளவுக்கு மேல் படம் கருமையாகத் தோன்றுதல். இந்தப் பகுதியில் ஒளிக்கற்றை பின்வாங்கிச் செல்கிறது

black level : (மின்.) கருமை அளவு : தொலைக்காட்சியில் கருமைப் பகுதியைக் குறிக்கும் கூட்டுத் தொலைக்காட்சி சமிக்கை

black light : (மின்.) கருமை ஒளி : புற ஊதா ஆற்றலை உமிழும் ஒளி

bladder worm : (உயி.) சவ்வுப் புழு : நாடாப்புழுவின் முட்டைப்படிவம்

blade : அலகு : ஒரு கத்தியின்வெட்டுவாய். விமானச் சுழல்