பக்கம்:அறிவியல் அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

98

con


களில் ஒருவகை. 2. சில பெரணிகள், உறையில் விதையில்லாத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. 3. கலவைக்கனி. (உயி)

configuration - உருவமைவு: 1. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி மின்னணுக்கள் அமைந்திருக்கும் முறை. உருவ அமைவுகள் பல குறியீடுகளால் குறிக்கப்படுபவை. 2. ஒரு மூலக்கூறில் அணுக்கள் அணுத்தொகுதிகள் அமைந்திருப்பதையும் இச்சொல் குறிக்கும். (வேதி)

conformation - அமைப்பாக்கம்: ஒற்றைப் பிணைப்புகளைச் சுற்றி ஒரு மூலக்கூறின் அணுக்கள் அல்லது அணுத்தொகுதிகள் இயல்பாகச் சுழல்வதால் ஏற்படும் அம்மூலக்கூறின் குறிப்பிட்ட வடிவமே அமைப்பாக்கம் ஆகும். இதை உண்டாக்குவது அமைப்பாக்கி (கன்பார்மர்) எ-டு. பூட்டேனில் இவ்வமைவு காணப்படுகிறது. (வேதி)

congenital - பிறவிநிலை: பிறப்பிலிருந்து இருக்கும் ஒரு நிலையைக் குறிப்பிடுவது.

conjugate - பரிமாற்றம்.

conjugate axes - பரிமாற்ற அச்சுகள்.

conjugate foci - பரிமாற்றக் குவியத் தொலைவுகள்.

conjugation - புணர்ச்சி, இணைவு: இரு உயிரணுக்கள் தற்காலிகமாக இணையும் செயல். கீழின உயிர்களில் நடைபெறுவது. இதில் இரு உயிரணுக்களின் பொருள்கள் பரிமாற்றம் பெறுதல். எ-டு. ஸ்பைரோகைரா. (உயி)

connection in parallel and series - பக்க அடுக்கு தொடரடுக்கு இணைப்பு: 1. பக்க அடுக்கு: இதில் எதிர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் நேர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் இணைக்கப்படும். வீட்டு மின்விளக்குகள் இவ்விணைப்பில் உள்ளன. 2. தொடரடுக்கு: இதில் ஒரு மின்கலத்தின் நேர்மின்வாய் அடுத்த மின்கலத்தின் எதிர்மின்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். அலங்கார விளக்குகளிலும் துருவு விளக்குகளிலும் பயன்படுவது. (இய)

connective - இணைப்பி: உடலில் ஒரே பகுதியிலுள்ள இரு நரம்பு முடிச்சுகளையும் நரம்பிழைத்திரள்களையும் இணைப்பது. பா. commissure. (உயி)

connective tissue - இணைப்புத்திசு: தாங்குதல், பாதுகாப்பு, பழுது பார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழுள்ளது. மற்றும் தமனிச் சுவர்கள், பந்தகங்கள் முதலியவற்றிலும் உள்ளது. (உயி)

conservation, law of - ஆற்றல் மாறா விதி: ஆற்றல் அழியா விதி. ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது. ஒருவகை ஆற்றல்