பக்கம்:அறிவியல் அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cor

101

cor


செல்லும். இஃது உயர்ந்த விலங்குகளில் ஒரே மாதிரி நடைபெறும் அடிப்படை இனப் பெருக்கச் செயல். (உயி)

corals - பவழ உயிரிகள்: சிறிய கடல் விலங்குகள். கடல் அனிமோனோடு தொடர்புடையவை. சுண்ண ஊட்டத்தாலானது கூடு. மையத் தரைக்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுபவை. குழிக்குடலிகள் வகுப்பைச் சார்ந்தவை. இவை பவழப் பாறைகளை உண்டாக்குபவை. (உயி)

cordate - இதய வடிவ இலை: காம்புக்கருகில் இலையின் அடி இதில் அகன்றும் மேல் குறுகியும் இருக்கும் பூவரசு. (உயி)

cordite - கார்டைட்: நைட்ரோ கிளிசரின், செல்லுலோஸ் நைட்ரேட் ஆகிய இரண்டுஞ் சேர்ந்த வெடிகலவை, மென்மையூட்டிகளும் நிலைப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும் துப்பாக்கி வெடிமருந்து. (வேதி)

core - உள்ளகம்: உட்பகுதி, மின் மாற்றிகளிலுள்ளது. (இய)

cork - தக்கை: அடுக்குத் திசுவிற்கு வெளியே ஆரமுறையில் கண்ணறைகள் அமைந்து உண்டாகும் தாவரப்பாதுகாப்புறை. பா. bark phellem. (உயி)

cork cambium - தக்கை அடுக்கியம்: தக்கை அடுக்குத் திசு. இரண்டாம் நிலை வளர்ச்சிக்குப் பின் ஏற்படுவது. (உயி)

corm - குமிழ்க்கிழங்கு: கந்தம். உணவுச் சேமிப்பும் இனப் பெருக்கமும் வேலைகள், எ-டு. கருணைக் கிழங்கு. (உயி)

cornea - விழி வெண்படலம்: விழிவெண்படல முன்பகுதி. ஒளியை உள்விடுவது. (உயி).

corola - அல்லிவட்டம்: பூவின் இரண்டாமடுக்கு இதில் அல்லிகள் நிறமுள்ளதாக இருக்கும்.இவ்வட்டம் தன் உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பளிப்பது. நிறங்களால் பூச்சிகளைக் கவர்வது. பச்சையத்தினால் ஒளிச் சேர்க்கை நடத்துவது. இதன் முக்கிய மூன்று வகைகள்: 1. இயல்பானவை 2. ஒழுங்குள்ளவை 3. ஒழுங்கற்றவை. இம்மூன்றும் மேலும் பலவகைப்படும்.

corona - முடிவட்டம்: 1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் பகுதி. 5. ஒரு கடத்தியைச் சூழ்ந்துள்ள காற்றின் ஒளிவிடுபகுதி. 6. வளர்கதிர்களின் ஒளிப்புள்ளி.(இய)

coronary vessels - இதயக் குருதிக் குழாய்கள்: இதயத் தமனிகளும் (2) சிரைகளும் (2) இதயத் தசைகளுக்குக் குருதி வழங்குபவை. (உயி)