பக்கம்:அறிவியல் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cur

108

CVI



காந்தப் பொருளாதல். (இய)

Curie therapy - குயூரி பண்டுவம்: கதிர்வீச்க மூலம் நோயைக் குணப்படுத்தல். (மரு)

curing - பதமாக்கல்: சிமெண்டு இறுகும்பொழுது வெடிக்காமல் இருக்க அதன் மீது தொடர்ந்து நீரை ஊற்றுதல். பூச்சுவேலை நடந்த மறுநாள் இது நிகழும். பா. setting. (தொ.நு)

curium - குயூரியம்: Cm. அதிக நச்சுத்தன்மையுள்ள தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. புளுட்டோனியத்திலிருந்து தொகுக்கப்படுவது. கு-244, 242. மின்வெப்ப ஆற்றல்பிறப்பிகளில் பயன்படுதல். (இய)

current - மின்னோட்டம்: பா. electric Current.

current balance - மின்னோட்டத் தராசு: ஆம்பியர் தராசு, மின்னோட்டத்தை முழுமையாக அளக்கப் பயன்படுவது. (இய)

current density - மின்னோட்ட அடர்த்தி: ஒரு மின்வாயின் ஓரலகு பரப்பிற்குரிய மின்பகுளி வழியே செல்லும் மின்னோட்டம். (இய)

cusp - முகடு: கடைவாய்ப் பற்கள். கடைவாய்முன்பற்கள் ஆகியவற்றின் முடியில் காணப்படும் கூம்பு வடிவங்கூர்ச்சி. சிறிய முன்பற்களுக்கு இரு முகடுகளும் பெரிய கடைவாய்ப்பற்களுக்கு மூன்று அல்லது நான்கு முகடுகளும் உண்டு. அவை துண்டாக்கவும் வெட்டவும் பயன்படுபவை. (உயி)

cuticle - தோலி: மேல் தோலினால் சுரக்கப்படும் பாதுகாப்படுக்கு. இது தாவரத்திலும் விலங்கிலும் அமைந்திருப்பது. இது கியூட்டின் என்னும் கரிமப் பொருளினால் உண்டாவது. (உயி)

cuticularization - தோலி தோன்றல்: நீர்மப் பொருள் சுரப்பினால் தோலி உண்டாகிக் கடினமாதல். (உயி)

cutinization - குயூட்டின்வயமாதல்: குயூட்டின் தாவரக் கண்ணறைச் சுவர்களில் படிதல். இலை, தண்டு. (உயி)

cuts - வெட்டுக்காயங்கள்: கத்தி, ஊசி, கூர்த்தகடு முதலியவற்றால் ஏற்படுங் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல். (மரு)

cutout - மின்நீக்குகூடு: மின்நீக்கி. சில நிலைகளில் தானாக மின்சுற்றைத் திறந்து மின்னோட்டத்தை மூடும் கருவியமைப்பு. மின்பலகையில் இருப்பது. (இய)

cutting - வெட்டி தடுதல்: போத்து நடுதல்: விதையிலா இனப் பெருக்கஞ் சார்ந்தது. எ-டு. கிளுவை, பூவரசு. பா. Vegetative propagation. (உயி)

CVI, Children's Vaccine Initiative - சிவிஐ, குழந்தைகள் ஆவைன் முயல்வுத் திட்டம்: இது ஒர் உலகத்திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப்