பக்கம்:அறிவியல் அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cya

109

cyc


பட்டது. ஒரே தடவையில் பாதுகாப்பாகச் செலுத்தக்கூடிய இசிவுநச்சுமத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் இதைச் செலுத்தலாம். (மரு)

cyanamide - சயனமைடு: கால்சியம் சயனைடு. உரம். (வேதி)

cyanamide process - சயனமைடு முறை: காற்றில் கால்சியம் இரு கார்பைடை வெப்பப்படுத்தி நைட்ரஜனை செயற்கையாக நிலைப்படுத்தும் தொழில்முறை. (வேதி)

cyanide - சயனைடு: அய்டிரஜன் சயனைடின் உப்பு. தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கப் பயன்படுதல். (வேதி)

cyanogas - சயனோ தூள்: HCN நேர்த்தியான கறுப்புத்தூள். கால்சியம் சயனைடு இதிலுள்ளது. காற்றுவெளி ஈரத்துடன் சேர்ந்து இது அய்டிரோ சயனிகக்காடி வளியைக் கொடுப்பது. எலிவளைகளில் புகையூட்டும் பொருள். (வேதி)

cyanometer - நீலமானி: கடல் அல்லது வானத்தின் நீல நிறத்தை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)

cyber attack - கணிப்பொறி தாக்குறுதல்.

cyber cash - கணிப்பொறி வழிப்பணம்.

cybernetics - ஒப்புத்தொடர்பியல்: விலங்கிலும் எந்திரத்திலும் நடைபெறும் செய்தித் தொடர்பு, கட்டுப்பாடு ஆகிய முறைகளை ஒப்புநோக்கி ஆராயுந்துறை. எ-டு. மனிதமூளை - கணிப்பொறி. இது தொழில்நுணுக்கத் துறையைச் சார்ந்தது. நன்கு வளர்ந்துள்ளது. (இய)

cyberphobia - கணிப்பொறி அச்சம்.

cyberpunk - கணிப்பொறி புதினம்.

cyberspace - கணிப்பொறி வெளி.

cycas - சைக்கஸ், சளம்பனை: உறையில் விதையில்லாத் தாவரம். சிறிய ஈச்சை மரம் போன்றது.

cycle - சுழற்சி: 1. ஒரு தொகுதி அடையும் மாற்றங்கள் இறுதியாகத் தன் பழைய நிலைக்கு வருதல். எ-டு. நைட்ரஜன் சுழற்சி. 2. ஒரு வினாடிக்கு இத்தனை சுற்றுகள், சுழற்சி/வினாடி. (இய)

cyclic compound - வளையச் சேர்மம்: அணு வளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஓரக வளையச் சேர்மம், வேற்றக வளையச் சேர்மம் என இருவகைப்படும். (வேதி)

cyclization - வளையச் சேர்மமாதல்: இது ஒரு வேதி வினை. இதில் நேர்த்தொடர் சேர்மம் வளையச் சேர்மமாகும். (வேதி)

cyclone - புயல்: பொதுவாகப் புறக்காற்று. முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக்காற்றைச் சுழியிட்டுச் செல்லும். இவ்வாறு சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதியே புயல். (பு.அறி)