பக்கம்:அறிவியல் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dar

112

dat


யவை இதற்கு ஏற்புடையனவாக இருக்கும். (உயி)

dark matter - கரிய பருப்பொருள்: பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 90% உள்ளது என நம்பப்படுவது. எரிடானஸ் விண்மீன் கூட்டத்திலுள்ளது எனப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ கவுல்டு என்பவரால் 1990களில் கண்டுபிடிக்கப்பட்டது. (வானி)

dark reaction - இருட்செயல் அல்லது வினை: இதற்குப் பிளாக்மன் வினை என்று பெயர். ஒளி வினையைத் தொடர்ந்து வருவது இச்செயல். இருட்டில் நடைபெறுவதால் இதற்கு இப்பெயர். இந்நிலையின் அடிப்படைச் செயல் நீர்வளியால் கரி ஈராக்சைடு ஒடுங்குதல். இவ் வினைக்கு வேண்டிய ஆற்றலை ஒளிவினையில் உண்டாகிய அமுபா அடினோசைன் மப்பாஸ்பேட் என்ஏடிபிஎச் ஆகிய பொருள்கள் அளித்தல், இதில் கரி ஈராக்சைடு சர்க்கரையாகிறது. (உயி)

dark space - இருள்வெளி: மின்னிறக்கு குழாயின் காற்றழுத்தத் தை 0.1 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது, ஊதாநிற நேர்மின் பிழம்பில் எதிர்மின் வாய்க்கருகில் ஓர் இருள்பகுதி தோன்றும். இதுவே பாரடே இருள் வெளி. மேலும் அழுத்தத்தை 0.01 செ.மீ அளவுக்குக் குறைக்கும்பொழுது, எதிர்மின் பிழம்பு எதிர்மின்வாயிலிருந்து விடுபட்டு மற்றொறு இருள்பகுதி தோன்றும். இது குருக்ஸ் இருள்வெளி ஆகும். இதில் மின்பிழம்பின் நீளமும் குறைந்திருக்கும். (இய)

Darwinism - தார்வினியம்: தார்வின் கொள்கை. உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. சார்லஸ் தார்வின் (1809-1882) 1858இல் முன்மொழிந்தது. காலத்தால் அழியாதது. இயற்கைத் தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொள்கை. இதன்படி வலுவுள்ளவை வாழ்தல், வலுவற்றவை வீழ்தல். (உயி)

dasymeter - வளியடத்திமானி: மெல்லிய கண்ணாடி உருண்டையுள்ள கருவி. வளியின் அடர்த்தியைக் காணப் பயன்படுவது. (இய).

dasyphyllous - இலை அடர்வு: நெருக்கமாகவும் தடித்தும் இலைகள் அமைந்த நிலை. (உயி)

data - தருவாய்கள்: தகவல்கள். தரவுகள், செய்திக்கூறுகள். இவை மெய்ம்மைகள், புள்ளி விவரங்கள், அளவீடுகள், குறீயீடுகள் ஆகியவற்றைக் கொண்டவை. இவற்றைச் செயல்முறையாக்கிச் செய்தித் தொடர்புக்குப் பயன்படுத்தலாம். கணிப்பொறிக்கு இன்றியமையாத தலைவாய்கள். (இய)

data base - தருவாய்க் கோவை: