பக்கம்:அறிவியல் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dia

119

dia


மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, மருந்தை உட்செலுத்துதல் (ஊசி போட்டுக் கொள்ளுதல்) ஆகிய இரண்டின் மூலமே கட்டப்படுத்தலாம். (உயி)

diagnosis - 1. நோயறிதல்: நோய்க் காரணத்தை அறிதல். (மரு) 2. குறையறிதல்: பிழைகளை அறிதல். (உயி)

diagnostic test - குறையறி தேர்வு: குறைகளுக்கான காரணத்தை அறிதல். (க.உள)

diakinesis - கதிரிழை நிலை: குன்றல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் கடைசி நிலை. பா. meiosis.

dial gauge - முகப்பளவி: காற்று, நீர், ஆகியவைகளின் உயர் அழுத்தங்களை அளக்கப் பயன்படும் கருவி. போர்டன் அளவி என்றும் பெயர் உண்டு. (இய)

dialysis - ஊடுபகுப்பு: 1. ஒருவழிப்பரவல் படலம் வழியாகத் தேர்வு. விரவல் என்ற முறையில் (அமினோ காடிகள்) முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை. 2. குருதியிலிருந்து கழிவுகளை இயற்கையில் சிறுநீரகம் பிரிக்கும் முறை. சிறுநீரகம் பழுதுபடுமானால், இப்பிரிப்பு செயற்கைச் சிறுநீரகம் மூலம் நடைபெறும். இது ஓர் இயந்திரம்.(உயி)

diamond - வைரம்: கரியின் புறவேற்றுரு, மிகக் கடினமானது, எல்லாக் கரைப்பான்களிலும் கரையாது, உருகுநிலை 7350° செ. மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துவது, கண்ணாடியைத் துண்டிக்கப் பயன்படுவது, அணிகலன்களிலும் பயன்படுவது. இதன் தூய்மை கேரட்டில் கூறப்படுவது. பா. carat. (இய)

diapause - வினை ஒடுக்கம்: செயலற்றநிலையும் வளர்ச்சிகுறை நிலையுமாகும். இதில் வளர்சிதைமாற்றம் அதிக அளவுக்குக் குறைகிறது. இது பல முட்டைகளிலும் கூட்டுப்புழு சிலையிலும் காணப்படுவது. பாதக மாரிக்கால நிலைகளைத் தாக்குப்பிடிக்க இது ஒரு நுட்பமாகும். (உயி)

diaphragm - குறுக்குத் தட்டம்: உதர விதானம்: 1. பாலூட்டிகளின் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் மிகப் பெரிய தசை. பாலூட்டிகளுக்குரிய பண்புகளில் இதுவும் ஒன்று. (உயி). 2. மையத்துளை கொண்ட உலோகத் தகடு. ஒளிப்படக்கருவி முதலிய ஒளிக்கருவிகளில் உள்வரும் ஒளியைக் கட்டுபடுத்துவது. (இய)

diaphysis - நெடுந்தண்டு: புறத்துறுப்பு எலும்பின் உருள் தண்டு. (உயி)

diarrohoea - வயிற்றுப்போக்கு: மலம் நீர்மமாகச் செல்லுதல். ஒ. dysentery.

diarthrosis - சுழல்மூட்டு: அனைத்து திசையிலும் தடையின்றி இயங்கும் மூட்டு. (உயி)

diaspore - டயஸ்போர்: அலுமினியம் ஆக்சைடும் அலு