பக்கம்:அறிவியல் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



dif

121

dil


வளைந்து அதற்கப்பால் தடையின் நிழல் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சி விளிம்பு வளைவு ஆகும். இந்நிகழ்ச்சி எல்லா அலைகளிலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. (இய)

diffraction fringes - விளிம்பு விளைவு வரிகள்: தடையின் நிழல் பகுதிகளுக்கருகில் சில வரிகள் தென்படும். இவற்றின் பொலிவு சிறுமம் பெருமம் என மாறி மாறியுள்ளது. இவை நிழல் விளிம்புக்கு இணையாக உள்ளன. இவையே விளிம்பு வரிகள். (இய)

diffraction grating - விளிம்புவிளைவுக் கீற்றணி: ஒரு கண்ணாடித் தட்டே இதன் இயல்பான வடிவம். இதில் ஒன்றுக் கொன்று இணையாக வரிகள் கீறப்படும். ஒவ்வொரு வரியின் விளிம்புகளிலும் விளிம்பு விளைவு, ஒளிக் கோலங்களையும் வேறுபட்ட கோணங்களில் கறுப்பு வரிகளையும் உண்டாக்கும். வரி இடைவெளி அலைநீளத்தைப் பொறுத்தது. எனவே, விளிம்புவிளைவுக் கீற்றணிகள் படு ஒளியின் நிறமாலைகளை உண்டாக்கப் பயன்படுபவை. (இய)

diffusion - விரவல்: 1. அதிக செறிவுள்ள இடத்திலிருந்து குறைந்த செறிவுள்ள இடத்திற்கு மூலக்கூறுகள் செல்லுதல் - வெளிப் பரவல். கரைபொருள் கரைப்பானில் கரைதல். 2. கரட்டுப் பரப்பினால் ஒளிக்கற்றை சிதறல் 3. அடிப்படைத் துகள்கள் பருப்பொருள் வழியே செல்லுதல். இந்நிலையில் சிதறல் நிகழ்தகவு அதிகமாகவும் பற்றும் நிகழ்தகவு குறைவாகவும் இருக்கும். பா. diffusionpump, reflection, refraction. (இய)

diffusion pump - விரவல் எக்கி: அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி. இதில் எண்ணெய் அல்லது பாதரச ஆவி பயன்படுவது. (இய)

digestion - செரித்தல்: செரிமானம், வளர்சிதை மாற்றத்தில் ஆக்கம் பெறும் எளிய கூட்டுப் பொருள்கள், அரிய உணவுப் பொருள்களிலிருந்து நொதி மாற்றத்தின் மூலம் ஏற்படுபவை. (உயி)

digit - 1.விரல்: கைவிரல், கால்விரல். (உயி) 2. எண்: 1,2,3... (இய)

digital - எண்ணிலக்க:

digital camera - எண்ணிலக்க ஒளிப்படப்பெட்டி:

digital computer - எண்ணிலக்க கணிப்பொறி: பா. computer.

digital data - எண்ணிலக்க தகவல்.

digital display - எண்ணிலக்க காட்சிப்பாடு: ஒர் அளவீட்டில் எண்களைத் திரையில் காட்டுதல். கணிப்பொறியில் நடைபெறுவது. (இய)

dihybrid - இரட்டைக் கலப்பினம்: இரு அமைவிடங்களில் வேற்றக நிலையிலுள்ள கலப்பினம்.

dilation - விரிதல்: பருமனில் அதிகமாதல். எ-டு. கண்மணி