பக்கம்:அறிவியல் அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

dip

123

dis


வளி அணுக்களைக் கொண்ட கூட்டுப் பொருள். எ-டு. கரி ஈராக்சைடு. (வேதி)

dip,angle of - சாய்வுக்கோணம்: புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள கிடைத்தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம். சாய்வுமானியால் அளக்கப்படுகிறது. (இய)

diphtheria - தொண்டை அடைப்பான்: தொற்றும் கொடிய நோய் குச்சியங்களால் உண்டாவது. இதனால் மேல் மூச்சு வழிப் பரப்பில் சாம்பல் நிறப் போலிப் படலம் உண்டாகும். தொண்டையில் வலியும் வீக்கமும் இருக்கும். முச்சுத் திணறலும் காணப்படும். குச்சியங்களால் உண்டாகும் நச்சுகள் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றைத் தாக்குவதால் இந்நோய் கடுமையானது. இதற்குத் தடுப்பு மருந்துகள் உள்ளன. (உயி)

dipleurula - இருமருங்கிளரி: தொடக்ககால முட்தோலிகளின் கற்பனை வடிவ இளரி. தடையின்றி நீந்தக்கூடியது. இருபக்கச்/சமச்சீருள்ளது. ஒ. pluteus. (உயி)

diploblastic - இருபடையுடைய: ஈரடுக்கு உயிரணுக்களைக் கொண்ட உயிரி. அதாவது, புறப்படை அகப்படை என்னும் இரு அடுக்குகள் மட்டுமே உள்ள உடலைக் கொண்ட விலங்கு அய்ட்ரா. (உயி)

diploid - இருமம்: ஓர் உயிரணு அல்லது உயிரி இரட்டைப்படை எண் நிறப்புரிகளைக் கொண்டிருத்தல்.

diplopia - இரட்டைப் பார்வை: கண் குறைபாடு. ஒரு பொருள் இரண்டாகத் தெரிதல். (உயி)

diplotene - கலப்புநிலை: ஒடுங்கல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் நிலை. பா. meiosis. (உயி)

dipnoi - நுரையீரல் மீன்கள்: நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்களே உள்ளன. புரடாப்டிரிஸ், நியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ். (உயி)

dipolar - இருமுனை கொண்ட: ஒரு மூலக்கூறில் தெளிவான மின்னேற்ற நிலைகள் பிரிக்கப்பட்டிருத்தல். அவை நேர்மின்னேற்றமும் (+) எதிர்மின்னேற்றமும் (-) ஆகும். (இய)

direct current, d.c. - ஒரு திசை மின்னோட்டம்: வேறுபெயர் நேர் மின்னோட்டம், பா. current.

disaccharide - இருமச் சர்க்கரைடு: இருமச் சர்க்கரை. இரு ஒருமச் சர்க்கரைக் கூறுகள் கொண்டது: சுக்ரோஸ், மால்டோஸ். (உயி)

disc drive memory - வட்டு இயக்க நினைவகம். (கணி)

disc siren - வட்டுச்சங்கு: தொழிற் சாலைகளிலும் பொது இடங்களிலும் சங்கொலி எழுப்புங்கருவி. மின்சாரத்தால் இயங்குவது.

disease - நோய்: உடல்உறுப்பு அல்லது உறுப்பின் வேலை,