பக்கம்:அறிவியல் அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dis

124

dis


இயல்பாகத் தன் நிலையிலிருந்து வேறுபடுதல். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி உண்டு. எ-டு. அடிசன் நோய். என்புருக்கி நோய் பா. ailment. (உயி)

disinfectant- தொற்று நீக்கி: நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள். (வேதி)

dislocation - மூட்டுநழுவல்: மூட்டுகள் தம் இயல்பான இடத்திலிருந்து விலகல். கட்டுப்போடுதலே சிறந்த வழி. (உயி)

dispersion - ஒளிச்சிதறல்: கலப்பு அலைநீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை, அதன் பகுதிகளாகப் பிரித்தலுக்கு ஒளிச்சிதறல் என்று பெயர். இக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரிகிறது. இதற்கு நிறப்பிரிகை என்று பெயர். இதனால் கிடைக்கும் முழு நிறத் தொகுதி நிறமாலை எனப்படும். இம் மாலையில் கீழிருந்து மேலாக வரிசையாகப் பின்வரும் நிறங்கள் இருக்கம். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு. (விப்ஜியார்) இம்மாலையால் உண்டாவதே வானவில். (இய)

displacement - இடப்பெயர்சி: இரு புள்ளிகளுக்கிடையே உள்ள நேர்க்கோட்டுத் தொலைவு. இஃது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த தொலைவையும் திசையையும் குறிக்கும். (இய)

displacement action - இடப்பெயர்ச்சி வினை: ஒர் அணு அல்லது அணுத் தொகுதி ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு அணு அல்லது அணுத்தொகுதியை இடப்பெயர்ச்சி செய்தல். துத்தநாகம் + அய்டிரோ குளோரிகக் காடி → துத்தநாகக் குளோரைடு + அய்டிரஜன்.

Zn+ 2HCI → ZnCl2 + H2

displacement, downward, air - காற்றின் கீழ்முகப் பெயர்ச்சி: காற்று கீழ் சென்று இலேசான வளி மேலே வருதல்; அம்மோனியா. (வேதி)

displacement, upward, air - காற்றின் மேல் முகப் பெயர்ச்சி: காற்று மேல் சென்று கனவளி கீழ் வருதல்: குளோரின். (வேதி)

displacement, downward, water - நீரின் கீழ்முகப் பெயர்ச்சி: வளிமேல் சென்று நீரைக் கீழ்த்தள்ளுதல்: நீர்வளி (வேதி)

displacement pump - இடப்பெயர்ச்சி எக்கி: வேதி நிலையங்களைச் சுற்றியமைந்து நீர்மங்களையும் வளிகளையும் அகற்றப்பயன்படுங் கருவி. (வேதி)

display behaviour - வெளிப்பாட்டு நடத்தை: ஒலி, தோரணை, இயக்கம் முதலிய செயல்களில் விலங்குகள் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளுக்குக் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்தல். எ-டு. பறவைக்காதல் விளையாட்டு. (உயி)

dissimiiation - தன்வய நீக்கம்: