பக்கம்:அறிவியல் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



diu

126

dop


யாகவும் இருக்கலாம். (உயி)

diurnal - பகற்சுறுசுறுப்பு: பகற்பொழுதில் செயலாக்கம் மிகுதியாக இருத்தல். எ-டு. தேனீக்கள். (உயி)

diverticulum - மருங்குபை: பை அல்லது குழாய் போன்ற புறவளர்ச்சி. உள்ளுறுப்பிலிருந்து கிளம்புவது. எ-டு. உணவு வழியிலுள்ள பெருங்குடல்வாய், குடல்வால்.

division - பிரிவு: தாவர வகைப்பாட்டில் பெருந்தொகுதிகளில் ஒன்று. பிரிவுக்கடுத்த துணைப்பிரிவு. எ-டு. குளோரோபைட் பசுந்தாவரங்கள். (உயி)

division of labour - வேலை பகிர்வு: சமூகப்பூச்சிகளிடையே அமைந்துள்ள பணிப்பகிர்வு. அரசி இனப்பெருக்கம் செய்தல், வேலைக்காரர்கள் உணவு தேடுதலைக் கவனித்தல். இஃது உயிர் மலர்ச்சியில் ஒரு முன்னேற்ற நிலையாகும். மனிதன் தோற்றுவித்த நிறுவனங்களில் இது சிறப்பாக அமைந்துள்ளது. (உயி)

DLT, Digital Linear Tape - டிஎல்டீ, எண்ணிலக்க நீள்நாடா: ஒரு சேமிப்புக் கருவியமைப்பு. (கணி)

dominance - ஓங்குதிறன்: ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும். (உயி)

DNA, deoxyribo nucleic acid - டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவுள்ள காடி. வாட்சன் கிரிக் மாதிரி இதனை நன்கு விளக்குகிறது. (உயி)

இவ்வியத்தகு மூலக்கூறுவின் இரட்டைச் சுருள் வடிவம் நாடா போன்றுள்ளது. இரு சுருள்களும் பாஸ்பேட் - சர்க்கரை பாஸ்பேட் சர்க்கரைத் தொடர்களைக் குறிப்பவை. இச்சுருள்களைச் சேர்க்கும் இணைப்புகள் பியூரைன் பைரிமிடின் இணைகள் ஆகும். புகழ் வாய்ந்த வாட்சன் கிரிக் மாதிரியாகும் இது. (உயி)

DNA sequencing - டிஎன்ஏ தொடராக்கம்: இதன் மூலம் மரபணுக்களில் பொதிந்துள்ள செய்தி என்ன என்பதை அறிய இயலும். இதைப் புனைந்தவர்கள் டாக்டர் மாக்சம், கில்பர்ட் (அமெரிக்கா) டாக்டர் சேங்கர் இங்கிலாந்து. (மரு)

donor - தருநர்: தன் குருதி, திசு அல்லது உறுப்பினைப் பிறருக்குத் தருபவர். இதனைப் பெறுபர் பெறுநர் ரெசிபியண்ட். (உயி)

donor species - தருநர் வகைகள் (உயி)

doping - ஆற்றல் பெருக்கல்: குறைக்கடத்தியுடன் மாசினைச் சேர்த்து அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் பெருக்கல் என்று பெயர். சேர்க்கப்படும் மாசுகள் பாக