பக்கம்:அறிவியல் அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Dop

127

dow


வரம், பொரான். (இய)

Doppler effect - (டாப்ளர் எபக்ட்) டாப்ளர் விளைவு: பொதுவாக, ஒலி மூலத்திற்கும் ஒலி பெறுவிக்கும் இடையே ஓர் ஒப்புமை இயக்கம் உண்டு. இதனால் ஒலி அதிர்வியைவில் மாற்றம் தோன்றும். இவ்வாறு ஏற்படும் மாற்றம் உண்மை நிலையன்று. இந்நிலையில் தோன்றும் அதிர்வெண் டாப்ளர் விளைவாகும். நாம் அமர்ந்திருக்கும் புகைவண்டி ஒடிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் வண்டியின் ஒலி அதிர்வியைவு அதைவிடப் பெரிய அளவில் உயர்ந்தும் வண்டி கடந்தபின் அவ்வியைவு இறங்கியும் காணப்படும். ஆனால், நாம் செல்லும் வண்டியில் அவ்வாறு இயைபு மாற்றமோ இறக்கமோ இல்லை. ரேடாரில் பயன்படுவது. (இய)

dormancy - விதையுறக்கம்: சேமித்துப் பாதுகாக்கப்பெற்ற விதையின் முளைக்கரு நீருடன் தொடர்பு கொள்ளும்வரை செயலற்றிருக்கும் நிலை. இந்நிலை சூல் விதையாக மாறியதிலிருந்து விதை ஊன்றப்படும் வரை இருக்கும். (உயி)

dorsal - முதுகுப்புறம்: உயிரியலில் சமச்சீர் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொல். ஒ. ventral. (உயி)

dorsifixed - இணைந்த: பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல். (உயி)

double bond - இரட்டைப் பிணைப்பு: ஒரு கூட்டுப்பொருளில் ஈரணுக்களை இணைக்கும் இரு உடன் இணைப்புகள். இதில் ஒரு பிணைப்பு சிக்மா பிணைப்பு. மற்றொன்று பை பிணைப்பு. (வேதி)

double decomposition - வேதி இரட்டைச் சிதைவு: (வேதி)

double fertilization - இரட்டைக் கருவுறுதல்: இது சில இருவிதைத் தாவரங்களில் நடைபெறுவது. மகரந்தக் குழல் உட்கருக்களில் ஒன்று முட்டையோடும் மற்றொன்று முனை உட்கருவோடும் சேர்வதால் முறையே கருவணுவும் மும்மய உட்சூழ்த்தசையும் உண்டாகின்றன. பா. (உயி)

double helix - இரு திருகுச் சுருள்: ஒரே அச்சில் ஒரே திசையில் இரு ஒத்த பல படிச் சங்கிலி சுருண்டிருக்கும் மூலக்கூறு. டி.என்.ஏ. (உயி)

double salt - ஈருப்பு: இரு உப்புகளின் கூட்டுப் பொருள். இரு உப்புகளும் சேர்ந்த கரைசலைப் படிகமாக்க இவ்வுப்பு கிடைக்கும். படிகாரம். இது பொட்டாசியம் சல்பேட்டும், அலுமினியச் சல்பேட்டும் சேர்ந்தது. (வேதி)

downsize - கீழளவாக்கு: ஓ. countdown.