பக்கம்:அறிவியல் அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dri

128

duc


driers - உலர்த்திகள்: வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர் கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு, பாசுவர ஐந்து ஆக்சைடு. (வேதி)

drowning - நீரில் மூழ்கல்: நீந்தத் தெரியாமலோ நீரோட்ட இழுப்பினாலோ நீருக்கு அடியில் சென்று முச்சு நிற்றல். இதற்குச் செயற்கை மூச்சு அளிக்க வேண்டும். (உயி)

dry cell - பசைமின்கலம்: உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப் பசைக்கலவை யுள்ளது. இதில் பாரீஸ் சாந்து, துத்ததாகக் குளோரைடு, நவச்சாரம் ஆகியவை உள்ளன. இதற்கடுத்து ஒரு துணிப்பையில் தூள் கலவை உள்ளது. இதில் துத்தநாகக் குளோரைடு, கரித்துள், நவச்சாரம், மாங்கனீஸ் ஈராக்சைடு ஆகியவை சேர்ந்த கலவை உள்ளது. பசை எளிதில் உலர்ந்துவிடாமலிருக்கவும் பையிலுள்ள கலவை கீழே சிந்தாமல் இருக்கவும் கலத்தின் வாய்ப்பகுதி கெட்டித்தாரினால் முடப்பட்டிருக்கும். உள்ளே உண்டாகும் வளிகள் வெளிச்செல்லக் கரித்தண்டுக்கருகில் ஒரு சிறிய துளை உண்டு. இதன் மின்னியக்கு விசை 15 ஒல்ட் கைவிளக்கு வானொலி முதலியவற்றில் பயன்படுவது.

dry distillation - உலர் வடித்துப் பகுத்தல்: ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் நீர்மமாகும். இதுவே உலர் வடித்துப் பகுத்தல். எ-டு. கால்சியம் அசிடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசிடோன் கிடைக்கும். (வேதி)

dryer - உலர்த்துவான்: ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது. (வேதி)

dry ice - உலர்பனிக்கட்டி: 80° செ.யில் உள்ள திண்மக்கரி ஈராக்சைடு. வண்டிகளில் செல்லும் உணவுப் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுவது. (வேதி)

drying oil - உலர்த்தும் எண்ணெய்: தாவர அல்லது விலங்கெண்ணெய்கள். காற்றில் பட்டு உறைபவை. இயற்கை எண்ணெய்கள். வண்ணக் குழைவுகளில் பயன்படுபவை. (வேதி)

ductility - கம்பியாக நீளுந்திறன்: செம்பு முதலிய உலோகங்களைக் கம்பியாக இழுக்கலாம். பொதுவாக, உலோகப் பண்புகளில் இதுவும் ஒன்று. (வேதி)

duciess glands - நாளாமில்லாச் சுரப்பிகள்: குழாய் இல்லாமல்