பக்கம்:அறிவியல் அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ect

135

eff


போன்ற வடிவம். கணிமப் படலத்திற்குக் கீழுள்ளது. சீரான விறைப்புள்ளது. கணிம இழுமம் கணிமக் கரையமாக (பிளாஸ்மா சால்) மாறவல்லது. பா. endoplasm.

ectotherm - புறவெப்ப வாழ்வி: சூழ்நிலையிலிருந்து நேரடியாக வெப்பத்தைப் பெறும் தனி உயிர். பறவைகள், பாலூட்டிகள் தவிர, ஏனையவை இவ்வாறு வெப்பத்தைப் பெறுபவை. (உயி)

ectozoon - புறவாழ்வி: ஏனைய உயிரிகளின் மேல் வாழும் விலங்கு (உயி)

edaphic factors - மண் காரணிகள்: மண்ணின் இயற்பண்பும் வேதிப்பண்பும் உயிரியல் பண்பும். இவை ஒரு வாழிடத்தில் இன்றியமையாத இயைபுறுப்பாக அமைபவை. தாவரப் பரவலில் அவற்றிற்குள்ள செல்வாக்கே இதற்குக் காரணம். குறிப்பிடக் கூடிய மண் காரணிகளாவன. நீரடக்கம், பிஎச், கரிமப்பொருள், மண்நயம். (உயி)

eddy current - சுழிப்பு மின்னோட்டம்: மின்சுற்றில் தடை குறைவாக உள்ள பொழுது, அதில் மின்னோட்டம் அதிகமிருக்கும். இதனால் கம்பியும் மின்கலங்களும் சூடாகும். மின் கலங்கள் விரைவிலேயே தம் ஆற்றலை இழக்கும். இக்குறைபாடு வரம்பு மீறிய மின்னோட்டமாகும். இது தீவிபத்துக்கு வழிவகுக்கும். ஒ. short circuit. (இய)

EDI, Electronic Data Interchange - மின்னணுத் தகவல் இடைமாற்றம்: மிதஇமா, ஈடிஐ.

EEG - ஈ.ஈ.ஜி: பா. electro encephalogam. (உயி)

eel - விலாங்கு மீன்: நீண்டதும் நொய்ந்ததுமான எலும்பு மீன். செதில்கள் சிறுத்துத் தோலில் புதையுண்டுள்ளன. இடுப்புத் துடுப்புகள் இல்லை. நன்னீரிலும் கடல்நீரிலும் வாழ்வது. எ-டு. ஆன்குவில்லா (உயி)

eel spear - விலாங்கு ஈட்டி: விலாங்கைப் பிடிக்கப் பயன்படும் அகன்ற கவராயமுள்ள கருவி. (உயி)

eelworm - விலாங்குப்புழு: இழைப்புழு அல்லது வட்டப்புழு. பன்றிக்குடல், மனிதக்குடல் முதலியவற்றில் ஒட்டுண்ணியாக வாழ்வது. எ-டு. ஆஸ்காரிஸ் லம்பிரி காய்டிஸ் (நாக்குப்பூச்சி)

effector - இயக்குவாய், இயக்கி: தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்புமுனை. (உயி)

efferent - அகல்: வெளிச்செல். 1. அகல் குருதிக் குழாய் மீன். 2. அகல்நரம்பு: மைய நரம்பு மண்டலத்திலிருந்து புறப் பகுதிக்குத் தூண்டலைக் கடத்துவது. ஒ. afferent.

effervescence - நுரைத்தெழல்: வேதிவினையினால் ஒரு நீர்மத்திலிருந்து வளிக்குமிழிகள் விடுபடுதல். பொங்கி எழல் என்றும்